search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    விவோ நெக்ஸ் விற்பனை துவங்கியது - விலை மற்றும் அறிமுக சலுகைகள்
    X

    விவோ நெக்ஸ் விற்பனை துவங்கியது - விலை மற்றும் அறிமுக சலுகைகள்

    விவோ நிறுவனத்தின் விலை உயர்ந்த நெக்ஸ் ஸ்மார்ட்போன் இந்திய விற்பனை துவங்கியது. இதன் விலை மற்றும் அறிமுக சலுகைகள் குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #VivoNex



    விவோ நிறுவனத்தின் விலை உயர்ந்த நெக்ஸ் ஸ்மார்ட்போனின் விற்பனை இந்தியாவில் துவங்கியது. இந்தியாவில் ரூ.44.490 விலையில் விற்பனை செய்யப்படும் விவோ ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனில் பல்வேறு அம்சங்கள் பிரத்யேகமாக வழங்கப்பட்டுள்ளன.

    இன்-ஸ்கிரீன் கைரேகை சென்சார், பாப்-அப் எலிவேட்டர் செல்ஃபி கேமரா உள்ளிட்டவை புதிய நெக்ஸ் ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்களாக இருக்கின்றன. இந்தியாவில் ஜூலை 19-ம் தேதி அறிமுகமான விவோ நெக்ஸ் ஸ்மார்ட்போன் பல்வேறு அறிமுக சலுகைகளுடன் விற்பனை செய்யப்படுகிறது.

    விவோ நெக்ஸ் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் விவோ அதிகாரப்பூர்வ வலைதளம் மற்றும் அமேசான் தளங்களில் விற்பனை செய்யப்படுகிறது. இத்துடன் விவோ விற்பனை மையங்கள் மற்றும் ப்ரிக் அன்ட் மோர்டார் விற்பனையகங்களிலும் நெக்ஸ் ஸ்மார்ட்போனினை வாங்கலாம். 



    அமேசானில் விவோ நெக்ஸ் அறிமுக சலுகைகள்:

    - ஆறு மாதங்களுக்கு செல்லுபடியாகும் ஒரு முறை ஸ்கிரீனினை மாற்றிக் கொள்ளும் வசதி.

    - அபேரியோ ரீடெயில் நிறுவனம் மூலம் வாங்கும் போது ரூ.22,495 பைபேக் பெற முடியும். 

    - விவோ சார்பில் ரூ.1950 கேஷ்பேக் மற்றும் ரிலையன்ஸ் ஜியோவின் இலவச பிரீமியம் செக்யூரிட்டி வழங்கப்படுகிறது.

    - பழைய ஸ்மார்ட்போன்களை எக்சேஞ்ச் செய்யும் போது ரூ.5000 வரை கூடுதல் தள்ளுபடி.

    - முன்னணி கிரெடிட் கார்டு மற்றும் பஜாஜ் ஃபின்சர்வ் இ.எம்.ஐ. கார்டு பயன்படுத்தும் போது வட்டியில்லா மாத தவணை முறை வசதி வழங்கப்படுகிறது.

    - தேர்வு செய்யப்பட்ட வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ.4000 வரை உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது.



    விவோ நெக்ஸ் சிறப்பம்சங்கள்:

    - 6.59 இன்ச் 2316x1080 பிக்சல் ஃபுல் ஹெச்டி பிளஸ் சூப்பர் AMOLED 19:3:9 டிஸ்ப்ளே
    - 2.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட்
    - அட்ரினோ 630 GPU
    - 8 ஜிபி ரேம்
    - 128 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - டூயல் சிம் ஸ்லாட்
    - ஃபன்டச் ஓஎஸ் 4.0 சார்ந்த ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ
    - 12 எம்பி டூயல் PD பிரைமரி கேமரா, டூயல் டோன் எல்இடி ஃபிளாஷ், சோனி IMX363 சென்சார், f/1.8 
    - 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.4
    - 8 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0
    - இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப்-சி
    - 4000 எம்ஏஹெச் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங்
    Next Story
    ×