search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    ரூ.144 விலையில் 2 ஜிபி டேட்டா வழங்கும் பதாஞ்சலி
    X

    ரூ.144 விலையில் 2 ஜிபி டேட்டா வழங்கும் பதாஞ்சலி

    பாபா ராம்தேவின் பதாஞ்சலி நிறுவனம் பிஎஸ்என்எல் நிறுவனத்துடன் இணைந்து சிம் கார்டுகளை வெளியிட்டு, புதிய சலுகைகளை அறிவித்துள்ளது.
    புதுடெல்லி:

    பதாஞ்சலி நிறுவனம் பிஎஸ்என்எல் உடன் இணைந்து இந்திய டெலிகாம் சந்தையில் சிம் கார்டுகளை வெளியிட்டுள்ளது. ஸ்வதேசி சம்ரிதி என அழைக்கப்படும் சிம் கார்டுகளை வாங்கும் வாடிக்கையாளர்கள் ரூ.144, ரூ.792 மற்றும் ரூ.1,584 என மூன்றில் ஒரு சலுகையை தேர்வு செய்ய வேண்டும். 

    மூன்று சலுகைகளிலும் தினமும் 2 ஜிபி டேட்டா, அன்லிமி்டடெட் வாய்ஸ் கால் மற்றும் பல்வேறு சலுகைகள் வெவ்வேறு வேலிடிட்டி கொண்டுள்ளன. முதற்கட்டமாக இந்த சிம்கார்டுகள் பதாஞ்சலி ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு பின் அனைவருக்கும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இத்துடன் ஸ்வதேசி சம்ரிதி சிம் கார்டு வைத்திருப்போருக்கு பதாஞ்சலி பொருட்களை வாங்கும் போது 10% தள்ளுபடி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிஎஸ்என்எல் - பதாஞ்சலி அறிவித்திருக்கும் ரூ.144 சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் (மும்பை மற்றும் டெல்லி தவிர்த்து), 2 ஜிபி டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் உள்ளிட்டவை 30 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. 

    இதேபோன்று ரூ.792 மற்றும் ரூ.1584 சலுகைகளிலும் இதேபோன்ற சலுகைகள் முறையே 180 மற்றும் 365 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. ஸ்வதேசி சிம் கார்டு வைத்திருப்போருக்கு மட்டும் அறிவிக்கப்பட்டுள்ளதால், முதற்கட்டமாக இவற்றை பதாஞ்சலி ஊழியர்கள் மட்டும் பயன்படுத்த முடியும். மேலும் இந்த சலுகைகள் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு பொருந்தாது.
    Next Story
    ×