search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    இன்-ஸ்கிரீன் கைரேகை சென்சார் கொண்ட சியோமி ஸ்மார்ட்போன்

    சியோமி நிறுவனத்தின் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனில் இன்-ஸ்கிரீன் கைரேகை சென்சார் வழங்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.
    பீஜிங்:

    சியோமி நிறுவனத்தின் 2018 ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனாக உருவாகி வரும் Mi8  மே 31-ம் தேதி ஷென்சென் நகரில் நடைபெற இருக்கும் விழாவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    சியோமி நிறுவனத்தின் எட்டாவது ஆண்டு விழா என்பதால் அந்நிறுவனம் Mi7 மாடலுக்கு பதில் புதிய ஸ்மார்ட்போனினை Mi8 என அழைக்கலாம் என கூறப்படுகிறது. புதிய Mi8 ஸ்மார்ட்போனின் சிறிய டீசர் வீடியோ இணையத்தில் லீக் ஆகியுள்ளது. புதிய வீடியோவில் சியோமியின் Mi8 ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனில் இன்-ஸ்கிரீன் கைரேகை சென்சார் மற்றும் 3D முக அங்கீகார வசதிகளை கொண்டிருப்பது தெரியவந்துள்ளது.



    சீன வலைத்தளத்தில் வெளியாகியிருக்கும் வீடியோ 3 நொடிகள் ஓடுகிறது. இதில் Mi8 ஸ்மார்ட்போனில் இன்-ஸ்கிரீன் கைரேகை சென்சார் வழங்கப்பட்டு இருப்பது தெளிவாக காட்சியளிக்கிறது. புதிய வீடியோ அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. முன்னதாக வெளியான தகவல்களில் சியோமி Mi8 ரீடெயில் பெட்டி புகைப்படம் வெளியாகி இருந்தது.

    பெட்டியின் மேல் 8 என்ற லோகோ மற்றும் Mi பிரான்டிங் செய்யப்பட்டுள்ளது. இதுதவிர ஸ்மார்ட்போனின் முன்பக்க பேனல் நாட்ச் ரக வடிவமைப்பு கொண்டிருப்பது தெரியவந்துள்ளது. முன்பக்கம் நாட்ச் செல்ஃபி கேமரா, மற்றும் 3D முக அங்கீகார தொழில்நுட்பம் கொண்டுள்ளது.

    சியோமி Mi8 எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:

    சியோமி நிறுவனத்தின் Mi8 ஃபிளாக்ஷிப் மாடலாக இருக்கும் என்பதால் இதில் பிரீமியம் அம்சங்கள் நிச்சயம் எதிர்பார்க்கலாம். அந்த வகையில் Mi8 ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட், அதிகபட்சம் 8 ஜிபி ரேம், 256 ஜிபி இன்டெர்னல் மெமரி, ஆன்ட்ராய்டு ஓரியோ இயங்குதளம், 3D முக அங்கீகார தொழில்நுட்பம் மற்றும் இன்-ஸ்கிரீன் கைரேகை சென்சார் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×