என் மலர்

  தொழில்நுட்பம்

  இந்தியாவில் நோக்கியா 6.1 விற்பனை துவங்கியது
  X

  இந்தியாவில் நோக்கியா 6.1 விற்பனை துவங்கியது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நோக்கியா 6.1 ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம், 64 ஜிபி இன்டெர்னல் மெமரி மாடல் இன்று முதல் விற்பனை செய்யப்படுகிறது.
  புதுடெல்லி:

  இந்தியாவில் நோக்கியா 6.1 ஸ்மார்ட்போன் இந்திய விற்பனை இன்று முதல் துவங்கி்யது. அமேசான் இந்தியா வலைத்தளத்தில் மட்டும் விற்பனை செய்யப்படும் நோக்கியா 6.1 ஸ்மார்ட்போன் முன்னதாக 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்ட மாடல் விற்பனை செய்யப்பட்டது. 

  நோக்கியா 6.1 ஸ்மார்ட்போனில் 5.5 இன்ச் 1080 பிக்சல் 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 கொண்டு பாதுகாக்கப்படுகிறது. இத்துடன் ஸ்னாப்டிராகன் 630 சிப்செட், ஆன்ட்ரய்டு 8.1 ஓரியோ இயங்குதளம், 16 எம்பி பிரைமரி கேமரா, f/2.0 அப்ரேச்சர், டூயல் டோன் எல்இடி ஃபிளாஷ், செய்ஸ் ஆப்டிக்ஸ் மற்றும் 8 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

  மெட்டல் யுனிபாடி வடிவைப்பு கொண்டிருக்கும் நோக்கியா 6.1 ஸ்மார்ட்போன் 6000 சீரிஸ் அலுமினியம் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இத்துடன் நோக்கியாவின் டூயல் சைட் / போத்தி அம்சம் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனிற்கு ஃபேஸ் அன்லாக் OTA அப்டேட் மூலம் இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டு வாக்கில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  நோக்கியா 6.1 சிறப்பம்சங்கள்:

  - 5.5 இன்ச் 1920x1080 பிக்சல் 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
  - கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 
  - 2.2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 630
  - அட்ரினோ 508 GPU
  - 4 ஜிபி ரேம்
  - 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
  - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
  - ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ
  - ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
  - 16 எம்பி பிரைமரி கேமரா, டூயல் டோன் எல்இடி பிளாஷ், PDAF, 1.0um பிக்சல், f/2.0
  - 8 எம்பி செல்ஃபி கேமரா, 1.12 பிக்சல், f/2.0 அப்ரேச்சர்
  - கைரேகை ஸ்கேனர்
  - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
  - 3000 எம்ஏஎச் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி

  இந்தியாவில் நோக்கியா 6.1 ஸ்மார்ட்போன் விலை ரூ.18,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முந்தைய 3 ஜிபி ரேம் மாடல் ரூ.16,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

  நோக்கியா 6.1 அறிமுக சலுகைகள்:

  - ஏர்டெல் 4ஜி சந்தாதாரர்களுக்கு ரூ.2000 கேஷ்பேக்
  - டிசம்பர் 31, 2018 வரை இலவச ஏர்டெல் டிவி சந்தா
  - சர்விஃபை வழங்கும் 12 மாதங்களுக்கான டேமேஜ் இன்சூரன்ஸ்
  - மேக்மைட்ரிப் சார்பில் உள்நாட்டு முன்பதிவுகளுக்கு 25% தள்ளுபடி
  - வட்டியில்லா மாத தவனை முறை வசதி
  Next Story
  ×