search icon
என் மலர்tooltip icon

    அறிந்து கொள்ளுங்கள்

    அப்பட்டமா காப்பி அடிச்சிட்டாங்க.. டெக்னோவுக்கு நத்திங் பதிலடி..!
    X

    அப்பட்டமா காப்பி அடிச்சிட்டாங்க.. டெக்னோவுக்கு நத்திங் பதிலடி..!

    • சமீபத்திய டீசரில் போவா 5 ப்ரோ எல்இடி லைட்டிங் எப்படி காட்சியளிக்கும் என்று தெரியவந்தது.
    • இன்பினிக்ஸ் மாடலின் எல்இடி லைட் நத்திங் போன் 2 மாடலில் உள்ளதை போன்றே காட்சியளிக்கிறது.

    டெக்னோ நிறுவனம் புதிய போவா 5 ப்ரோ ஸ்மார்ட்போனிற்கான டீசர்களை வெளியிட்டு வருகிறது. விரைவில் இந்த ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதன் பின்புறம் எல்இடி லைட்கள் அடங்கிய டிசைன் கொண்டிருக்கிறது. ஒட்டுமொத்தத்தில் இதன் கான்செப்ட் நத்திங் போன் 2 போன்றே இருந்தாலும், தோற்றத்தில் சற்று வித்தியாசமாக காட்சியளிக்கிறது.

    டெக்னோ நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட டீசரில் புதிய போவா 5 ப்ரோ மாடலுக்கான எல்இடி லைட்டிங் சிஸ்டம் எப்படி காட்சியளிக்கும் என்று தெரியவந்துள்ளது. அதில் போவா 5 ப்ரோ மாடலில் அழைப்புகள் வரும் போது, மூன்று எல்இடி ஸ்ட்ரிப்கள் ஒரே புள்ளியில் இணையும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

    டிசைன் அடிப்படையில் இது நத்திங் போன் 2 மாடலின் அச்சு அசலான காப்பி இல்லை என்ற போதிலும், கான்செப்ட் நத்திங் நிறுவனம் அறிமுகம் செய்தது தான். மேலும் டெக்னோவின் இந்த செயலுக்கு நத்திங் டுவிட்டரில் பதிலடி கொடுத்திருக்கிறது. டெக்னோ வெளியிட்ட டீசர் அடங்கிய டுவிட்டர் பதிவை ரிடுவீட் தெய்த நத்திங், "அடுத்த முறை எங்களின் வீட்டு பாடத்தை காப்பி அடுக்க விரும்பினால், எங்களிடம் கேளுங்கள்," என்று கூறி இருக்கிறது.

    டெக்னோ மட்டுமின்றி இன்பினிக்ஸ் நிறுவனமும் நத்திங் போன்ற டிசைன் கொண்ட ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இன்பினிக்ஸ் ஸ்மார்ட்போனின் எல்இடி லைட்களும் போன் 2 மாடலில் உள்ளதை போன்றே காட்சியளிக்கிறது. இதோடு நிறங்களும் நத்திங் போன் 2 போன்று பிளாக், வைட் ஆப்ஷன்களை கொண்டிருக்கிறது.

    இன்பினிக்ஸ் செயல்பாட்டுக்கு பதில் அளித்த நத்திங் நிறுவனர் கார்ல் பெய், "வழக்கறிஞர்களை தயார்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது," என்று தெரிவித்து இருந்தார். நத்திங் நிறுவனம் இந்த பிரச்சினையை உண்மையில் சட்டரீதியாக அணுக முடிவு செய்துவிட்டதா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

    Next Story
    ×