search icon
என் மலர்tooltip icon

    அறிந்து கொள்ளுங்கள்

    தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பது எப்படி?
    X

    தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பது எப்படி?

    • தமிழ்நாட்டில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டு, இதறகான பணிகள் விரைவுப்படுத்தப்பட்டு உள்ளன.
    • மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்க சிறப்பு முகாம்கள் 2 ஆயிரத்து 811 மின் அலுவலகங்களில் தொடங்கப்பட்டு இருக்கிறது.

    தமிழ்நாட்டில் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பது கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது. 100 யூனிட் மானியம் பெறும் பயனர்கள் அனைவரும் தங்களின் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டும் என கடந்த அக்டோபர் 6 ஆம் தேதி மின் வாரியம் அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. பின் கடந்த வாரம் மின் வாரியம் வெளியிட்ட சுற்றறிக்கையில் ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைப்பது கட்டாயம் என மீண்டும் அறிவிக்கப்பட்டு இருந்தது.

    இதைத் தொடர்ந்து பொது மக்கள் தங்களின் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க ஆர்வம் செலுத்தி வருகின்றனர். மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்க ஆன்லைன் மற்றும் மின் வாரிய அலுவலகங்களில் செயல்படும் சிறப்பு முகாமை பொது மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்காக தமிழ்நாடு மின்வாரியம் சார்பில் 2 ஆயிரத்து 811 மின் அலுவலகங்களில் சிறப்பு முகாம்கள் துவங்கப்பட்டுள்ளன.

    ஆன்லைனில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பது எப்படி?

    - முதலில் https://nsc.tnebltd.gov.in/adharupload/ இணைய முகவரியை திறக்க வேண்டும்

    - அடுத்து திரையில் உங்களின் மின் இணைப்பு எண்ணை பதிவிட வேண்டும்

    - மொபைல் நம்பரை பதிவிட்டு, அதன் பின் கடவுச்சொல்லை பெற வேண்டும்

    - மொபைல் நம்பருக்கு வந்த கடவுச்சொல்லை பதிவிட வேண்டும்

    - மின் இணைப்பை பயன்படுத்துவோர் விவரங்களை பதிவிட வேண்டும்

    - இனி இணைக்க வேண்டியவரின் ஆதார் எண்ணை பதிவிட வேண்டும்

    - அடுத்து ஆதாரில் உள்ளதை போன்று பெயரை பதிவிட வேண்டும்

    - ஆதார் அட்டை நகலை பதிவேற்றம் செய்ய வேண்டும்

    - இறுதியில் படிவத்தை சமர்பித்து விட்டு, பதிவேற்றம் செய்ததற்கான ரசீதை டவுன்லோட் செய்ய வேண்டும்

    Next Story
    ×