search icon
என் மலர்tooltip icon

    அறிந்து கொள்ளுங்கள்

    ஸ்மார்ட்போனில் ஜியோ 5ஜி ஆக்டிவேட் செய்வது எப்படி?
    X

    ஸ்மார்ட்போனில் ஜியோ 5ஜி ஆக்டிவேட் செய்வது எப்படி?

    • ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்திய சந்தையில் 5ஜி சேவையை வெளியிடும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.
    • ஸ்மார்ட்போன் நிறுவனங்களும் தங்களின் சாதனங்களில் 5ஜி சேவையை வழங்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.

    இந்தியாவின் மும்பை, டெல்லி, கொல்கத்தா, சென்னை, வாரனாசி, நத்வாரா, பெங்களூரு மற்றும் ஐதராபாத் என எட்டு நகரங்களில் ரிலையன்ஸ் ஜியோ 5ஜி சேவை வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த பகுதிகளில் வசிக்கும் ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கைாயளர்கள் அதிவேக 5ஜி நெட்வொர்கில் இணைந்து கொள்ள முடியும். எனினும், இதற்கு மைஜியோ செயலியில் இன்வைட் பெற்று இருப்பது அவசியம் ஆகும்.

    டிசம்பர் 2023-க்குள் நாடு முழுக்க 5ஜி சேவைகளை வழங்க ரிலையன்ஸ் ஜியோ முடிவு செய்து இருக்கிறது. ஜியோ பயனர்கள் தங்களின் 5ஜி ஸ்மார்ட்போனில் 5ஜி சேவையை பயன்படுத்தலாம். புதிய தலைமுறை 5ஜி சேவைகளை பயன்படுத்த ரிலையன்ஸ் ஜியோ சிறப்பு அறிமுக சலுகையை அறிவித்து இருக்கிறது. தேர்வு செய்யப்பட்ட பயனர்களுக்கு 5ஜி சேவையை 500Mbps முதல் 1Gbps வேகத்தில் பயன்படுத்த முடியும்.

    மைஜியோ செயலியில் 5ஜி-யை பயன்படுத்துவதற்கான நோட்டிபிகேஷன் வைத்திருப்பவர்கள், தங்களின் ஸ்மார்ட்போனில் எப்படி 5ஜி நெட்வொர்க்கில் இணைய வேண்டும் என்பதை தொடர்ந்து பார்ப்போம்.

    - முதலில் ஸ்மார்ட்போனின் "செட்டிங்ஸ்" செல்ல வேண்டும்

    - அடுத்து "மொபைல் நெட்வொர்க்" அல்லது இதே போன்ற ஆப்ஷனை க்ளிக் செய்யவும்.

    - இனி ஜியோ சிம் ஆப்ஷனில் "பிரெஃபர்டு நெட்வொர்க் டைப்" ஆப்ஷனை க்ளிக் செய்யவும்.

    - இதில் 3ஜி, 4ஜி மற்றும் 5ஜி போன்ற ஆப்ஷன்கள் பட்டியலிடப்பட்டு இருக்கும். இதில் 5ஜி-யை தேர்வு செய்ய வேண்டும்.

    ஸ்மார்ட்போன் செட்டிங்ஸ்-இல் 5ஜி நெட்வொர்க்-ஐ தேர்வு செய்ததும், ஸ்மார்ட்போனின் நெட்வொர்க் ஸ்டேட்டஸ் பாரில் 5ஜி தெரியும். இனி வழக்கம் போல் மொபைல் டேட்டாவில் இணைய சேவையை பயன்படுத்தலாம்.

    தற்போது ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் தங்களின் வாடிக்கையாளர்கள் 5ஜி சேவையை பெற புது சிம் கார்டு வாங்க வேண்டிய அவசியம் இல்லை என தெரிவித்துள்ளன. அந்த வகையில், தற்போதைய 4ஜி சிம் கொண்டு புதிய நெட்வொர்க்கில் இணைய முடியும்.

    Next Story
    ×