என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாற்று திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
    X

    மாற்று திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

    • அரியலூரில் மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர் கூட்டத்தில்பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது
    • மாற்று திறனாளிகளுக்கு கலெக்டர் ஆனிமேரி சுவர்ணா வழங்கினார்

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டம் மாற்றுத்தி றனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்மாவட்ட கலெக்டர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா, தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளி நபர்களிடமிருந்து 93 மனுக்கள் பெறப்பட்டு சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு இம்மனுக்கள் மீது உரிய நடிவக்கை மேற்கொள்ள மாவட்ட கலெக்டர் அறிவுரை வழங்கினார். மேலும் இக்கூட்டதில் காது கேளாத மாற்றுத்திறனாளி நபர்களிடமிருந்து காதொலி கருவி வேண்டி பெறப்பட்ட ஆறு மனுதாரர்களுக்கு இக்கூட்டத்திலேயே உடனடியாக ரூ.24,000 (இருபத்தி நான்காயிரம்) மதிப்பீட்டில் காதொலி கருவிகள் மற்றும் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி நபருக்கு ரூ.1,06,000 (ஒரு இலட்சத்து ஆறாயிரம்) மதிப்புள்ள பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் ஒன்றும் ஆகமொத்தம் ரூ.1,30,000 (ஒரு இலட்சத்து முப்பதாயிரம்) மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    Next Story
    ×