என் மலர்
புதிய கேஜெட்டுகள்

கொஞ்சம் வெயிட் பன்னுங்க.. சக்திவாய்ந்த மேக்புக் ப்ரோ அறிமுகம் செய்யும் ஆப்பிள் - எப்போ தெரியுமா?
- ஆப்பிள் M3 சிப்செட்-ஐ TSMC உற்பத்தி செய்யும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
- 2024 மத்தியில் M3 சிப்செட் கொண்ட 14-இன்ச், 16-இன்ச் மேக்புக் ப்ரோ மாடல்கள் அறிமுகமாகும் என தகவல்.
ஆப்பிள் நிறுவனம் அடுத்த தலைமுறை ஆப்பிள் சிலிகான் சிப்செட்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. M2 சிப்செட்களின் மேம்பட்ட வெர்ஷனாக M3 பிராசஸர்களை ஆப்பிள் அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் மாதங்களில் புதிய M3 சிப்செட் கொண்ட மேக்புக் ஏர் மாடல் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.
ஆப்பிள் வல்லுனரான மார்க் குர்மேன் வெளியிட்டு இருக்கும் தகவல்களின் படி ஆப்பிள் நிறுவனம் M3 சிப்செட் கொண்ட டாப் என்ட் மேக்புக் ப்ரோ மற்றும் மேக் மினி மாடல்களை அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யலாம் என்று தெரிவித்து இருக்கிறார். M3 சிப்செட் கொண்ட மேக் மினி மாடல் நிச்சயம் வெளியாகும் எனினும், இப்போதைக்கு இது வெளியாகாது என்று அவர் மேலும் தெரிவித்தார்.
2024 மத்தியில் M3 சிப்செட் கொண்ட 14-இன்ச் மற்றும் 16-இன்ச் மேக்புக் ப்ரோ மாடல்கள் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக அவவர் தெரிவித்து இருக்கிறார். M3 சிப்செட் கொண்ட முதற்கட்ட சாதனங்கள் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் அறிமுகம் செய்யப்படும் என்றும் இதில் 13-இன்ச் மேக்புக் ப்ரோ, 13 இன்ச் மேக்புக் ஏர் மற்றும் 24-இன்ச் ஐமேக் மாடல்கள் இடம்பெற்று இருக்கும் என்று தெரிவித்து இருகிறார்.
புதிய ஆப்பிள் M3 சிப்செட்-ஐ TSMC உற்பத்தி செய்யும் என்றும் இது 3 நானோமீட்டர் முறையில் உருவாக்கப்பட்டு இருக்கும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. இது தற்போதைய M2 சிப்செட்களை விட அதிக திறன் கொண்டிருக்கும். தற்போதைய M2 சிப்செட்கள் 5 நானோமீட்டர் முறையில் உருவாக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.






