என் மலர்
புதிய கேஜெட்டுகள்
உலகின் அதிக மெமரி கொண்ட யுஎஸ்பி ஃபிளாஷ் டிரைவ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மெமரி அளவு உள்ளிட்ட இதர தகவல்களை இங்கு பார்ப்போம்.
கலிஃபோர்னியா:
கிங்ஸ்டன் நிறுவனம் டேட்டா டிராவெல்லர் GT ஃபிளாஷ் டிரைவ் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. சுமார் 2000GB என்ற அளவில் உலகின் அதிக மெமரி கொண்ட ஃபிளாஷ் டிரைவ் சாதனமாக இது இருக்கிறது. புதிய யுஎஸ்பி ஃபிளாஷ் டிரைவ் 1000GB மர்றும் 2000GB என இருவித அளவுகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
கிங்ஸ்டன் அறிமுகம் செய்திருக்கும் இரண்டு ஃபிளாஷ் டிரைவ்களின் விநியோகம் பிப்ரவரி மாதம் துவங்கும் என்றும் இதன் விலை குறித்து எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை. டேட்டா டிராவெல்லர் அல்டிமேட் GT ஃபிளாஷ் டிரைவ் யுஎஸ்பி 3.1 தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. புதிய ஃபிளாஷ் டிரைவ் சின்க்-அலாய் மெட்டல் பாடி கொண்டுள்ளதால் ஷாக் ரெசிஸ்டன்ட் அம்சம் கொண்டுள்ளது.
புதிய டேட்டா டிராவெல்லர் அல்டிமேட் GT மூலம் வாடிக்கையாளர்கள் தங்களின் மொபைல் டேட்டா அளவை அதிகரிக்க முடியும். முன்னதாக கிங்ஸ்டன் அறிமுகம் செய்த 1000GB யுஎஸ்பி டிரைவ் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதால் புதிய சாதனத்தில் மெமரி அளவை இருமடங்கு அதிகரித்திருக்கிறோம் என கிங்ஸ்டன் நிறுவனத்தின் வியாபார பிரிவு மேலாளர் ஜீன் வோங் தெரிவித்துள்ளார்.
கிங்ஸ்டன் ஃபிளாஷ் டிரைவ் 72mmx26.94mmx21mm அளவு கொண்டுள்ளது. தற்சமயம் வெளியாகும் லேப்டாப்களிலேயே இத்தகைய மெமரி அளவு வழங்கப்படாத நிலையில் கிங்ஸ்டன் அறிமுகம் செய்துள்ள புதிய ஃபிளாஷ் டிரைவ்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழாவில் சாம்சங் நிறுவனம் புதிய ஸ்மார்ட் டி.வி.யை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட் டிவி குறித்த விரிவான தகவல்களை இங்கு பார்ப்போம்..
சான்பிரான்சிஸ்கோ:
சாம்சங் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் டி.வி. அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய வகை QLED டி.வி. சாம்சங் நிறுவனத்தின் புதிய ஃபிளாக்ஷிப் டிவியாக இது இருக்கும் என்றும் இந்த வகை டி.வி.க்கள் SUHD வகை டிவிக்களுக்கு மாற்றாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
புதிய QLED டி.வி.க்கள் முன்பை விட அதிக ஸ்மார்ட் என்றும் அனைத்து டி.வி. சாதனங்களுடன் இணைந்து கொள்ளும் திறன் கொண்டுள்ளது. இதன் இயங்குதளம் எல்லாவற்றையும் புரிந்து கொள்வதோடு, புதிய எல்இடி டி.வி.க்களை சாம்சங் ஸ்மார்ட் ரிமோட் மூலமாக எளிதாக இயக்க முடியும். புதிய QLED டிவிக்களில் புதிய வகை மேம்படுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
சிறப்பான தோற்றம், அதிக துல்லியமான படங்களை பிரதிபலிக்கும் திறன் என பல்வேறு அம்சங்களில் புதிய சாம்சங் QLED டிவி மேம்படுத்தப்பட்டுள்ளது. புதிய வகை டி.வி.க்களில் சிறப்பான அனுபவத்தை வழங்க சாம்சங் நிறுவனம் பிரத்தியேக மெட்டல் குவான்டம் டாட் பொருளை பயன்படுத்தியுள்ளது.
புதிய வகை சாம்சங் ஸ்மார்ட் டி.வி.க்கள் இருவித மாடல்களில் கிடைக்கிறது. Q8 curved மற்றும் Q9 Flat என பெயரிடப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட் டி.வி.களின் 65-இன்ச் மாடல் சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் Q9 Flat டி.வி.யினை சுவற்றில் மிக எளிதாக பொருத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட ஏர்பாட்ஸ் வயர்லெஸ் ஹெட்போன் போன்ற சாதனம் ஒன்றை சாம்சங் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சியோல்:
சாம்சங் நிறுவனம் தனது சொந்த ஏர்பாட்ஸ் போன்ற சாதனத்தை தயாரித்து வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது. 'இயர்பட்ஸ்' என்ற பெயரில் சாம்சங் நிறுவனம் புதிய வயர்லெஸ் ஹெட்போன்களை தயாரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சமீபத்தில் கிடைத்திருக்கும் தகவல்களின் படி புதிய கேலக்ஸி S8 ஸ்மார்ட்போனுடன் இயர்பட்ஸ் சாதனத்தை சாம்சங் வெளியிடும் என கூறப்படுகிறது. ஆப்பிள் ஏர்பாட்ஸ் சாதனத்திற்கு போட்டியளிக்கும் விதமாக சாம்சங் நிறுவனம் புதிய சாதனத்தை வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது.
தற்சமயம் கிடைத்திருக்கும் தகவல்களின் படி புதிய வயர்லெஸ் இயர்போன்கள் கேலக்ஸி S8 ஸ்மார்ட்போன்களுடன் வெளியிடப்படுமா அல்லது தனியே விற்பனை செய்யப்படுமா என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை. இதனால் புதிய ஸ்மார்ட்போனில் 3.5 எம்எம் ஹெட்போன் ஜாக் வழங்கப்படுவது குறித்து எவ்வித தகவலும் இல்லை.
இத்துடன் சாம்சங் இயர்பட்ஸ்-ல் ஹர்மன் தொழில்நுட்பம், ஏர்பாட்ஸ்களில் ஆண்ட்ராய்டு சின்க் அம்சம் வழங்கப்பட்டதை போன்ற அம்சம் சாம்சங் இயர்பாட்ஸ்களிலும் வழங்கப்படுமா என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை. ஒருவேளை சாம்சங் இயர்பாட்ஸ் வெளியிடப்பட்டாலும், இது அந்நிறுவனத்தின் முதல் சாதனமாக இருக்காது. ஏற்கனவே சாம்சங் கியர் ஐகான்X என்ற ஹெட்போன்களை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
சில காலமாக எதிர்பார்க்கப்பட்டு வரும் கேலக்ஸி S8 ஸ்மார்ட்போனில், அந்நிறுவனம் வழக்கமான பட்டன் அமைப்புகளை நீக்கி புதிய கேபாசிட்டிவ் பட்டன்களை வழங்கும் என கூறப்படுகிறது. மேலும் முழுமையான வன்பொருள் பட்டன்களை நீக்கி, இவற்றிற்கு மாற்றாக 3டி டச் போன்ற அம்சம் வழங்கப்படும் எனவும் கூறப்படுகிறது.
இந்தியாவில் ஜீப்ரானிக்ஸ் நிறுவனத்தின் புதிய மல்டிமீடியா ஸ்பீக்கர்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இது குறித்த விரிவான தகவல்களை இங்கு பார்ப்போம்..
புதுடெல்லி:
இந்தியாவில் நுகர்வோர் மின்சாதனங்களை விற்பனை செய்வதில் வேகமாக வளர்ந்து வரும் ஜீப்ரானிக்ஸ் நிறுவனம் ஆடியோ தொழில்நுட்ப பிரிவுகளில் புதிய சாதனம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. ப்ளூடூத் ஸ்பீக்கர்கள், டவர் ஸ்பீக்கர்கள் மற்றும் ஹோம் தியேட்டர் சிஸ்டம்ஸ் உள்ளிட்ட சாதனங்களுக்கு இந்திய நுகர்வோரிடம் இருந்து தேவை அதிகரித்து வரும் நிலையில், ஜீப்ரானிக்ஸ் சமீப காலமாக பல்வேறு புதிய சாதனங்களை அறிமுகம் செய்து வருகிறது.
அந்த வகையில் ஜீப்ரானிக்ஸ் 2.2 மல்டிமீடியா ஸ்பீக்கர் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. ZEB-BT361RUCF என அழைக்கப்படும் இந்த 2.2 ஸ்பீக்கர் அனைவரின் கண்களையும் கவரும், என்பதோடு துள்ளலான இசையை கேட்கும் போதும், திரைப்படத்தைப் பார்க்கும் இசைப்பிரியர்களின் மனதைக் கவர்வதாகவும் அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய ஸ்பீக்கர்களுடன் துணை ஸ்பீக்கர்கள் மற்றும் ஊஃப்பருக்கு வழங்கப்பட்டுள்ள மரப்பெட்டி அமைப்பு – இசைப்பிரியர்கள் பொதுவாக எதிர்பார்க்கும் உறுதியையும் நேர்த்தியான தோற்றத்தையும் இதற்கு வழங்கும். ஒரே பெட்டிக்குள் அமைக்கப்பட்டுள்ள இரண்டு 4-அங்குல சப்வூஃப்பர் டிரைவர்கள் அறைக்குள் திரையரங்கம் போன்ற சூழ்நிலையை உருவாக்கும் என்று ஜீப்ரானிக்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் பிரதீப் தோஷி தெரிவித்தார்.
ஜீப்ரானிக்ஸ் புதிய ஸ்பீக்கரில் ப்ளூடூத் இணைப்பு, USB போர்ட், எஸ்டி சப்போர்ட் மற்றும் உள்ளமைக்கப்பட்ட FM டியூனருடன் வருகிறது. இதன் ஒவ்வொரு துணை ஸ்பீக்கர்கள் 12W வெளிப்பாட்டினை வழங்குகின்றன; இது சரியான அளவு பேஸ் மற்றும் உயர்ந்த ட்ரிப்பில் இசையின் சிறந்த கலவையை வழங்கப்படுவதை உறுதி செய்கிறது.
LED காட்சித்திரையுடன் பொருத்தப்பட்டுள்ள கட்டுப்பாட்டு பட்டன்கள், இதன் மல்ட்டிமீடியா கட்டுப்பாடுகளை நிர்வகிக்க உதவி செய்கிறது. ஒலியளவு, பேஸ் மற்றும் ட்ரிப்பில் ஆகியவை பணிச்சூழலியல் முறைப்படி சப்வூஃபருக்கு முன்னால் அமைக்கப்பட்டுள்ளன. இந்த 2.2 ஸ்பீக்கர் ஒரு ரிமோட் கண்ட்ரோலுடன் வருகிறது, இதன் மூலம் அனைத்தையும் தூரத்தில் இருந்தே இயக்க முடியும்.
ஜீப்ரானிக்ஸ் 2.2 மல்டிமீடியா ஸ்பீக்கர் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் மூலம் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் விலை இந்தியாவில் ரூ.4242 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் அடுத்த வாரம் நடைபெற இருக்கும் விழாவில் எல்ஜி நிறுவனம் காற்றில் மிதக்கும் ஸ்பீக்கர்களை வெளியிட இருப்பதாக அறிவித்துள்ளது.
சியோல்:
அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் அடுத்த வாரம் அதாவது ஜனவரி 5 முதல் ஜனவரி 8 ஆம் தேதி வரை நுகர்வோர் மின்சாதன திருவிழா (CES 2017) நடைபெற உள்ளது. இவ்விழாவில் ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு புதிய ரக தொழில்நுட்ப சாதனங்கள் அறிமுகம் செய்யப்படும். அந்த வகையில் எல்ஜி நிறுவனம் தயாரித்து இருக்கும் காற்றில் மிதக்கும் ஸ்பீக்கர்களும் இவ்விழாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன.
எல்ஜி நிறுவனம் அறிமுகம் செய்ய இருக்கும் இந்த ஸ்பீக்கர்கள் ப்ளூடூத் தொழில்நுட்பம் சார்ந்து இயங்கும் என்பதோடு காற்றில் எவ்வித உதவியும் இன்றி மிதக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எல்ஜி அறிமுகம் செய்ய இருக்கும் புதிய ப்ளூடூத் ஸ்பீக்கர் எல்ஜி Pj9 என பெயரிடப்பட்டுள்ளது.
புதிய எல்ஜி Pj9 ஸ்பீக்கர்களுடன் 'லீவியேஷன் ஸ்டேஷன்' (Leviation Station) வழங்கப்படுகிறது. இந்த லீவியேஷன் ஸ்டேஷன் ஸ்பீக்கர்களின் சார்சிங் டாக் போன்று இயங்குவதோடு ஸ்பீக்கர்களை காற்றிலும் மிதக்கச் செய்கிறது. எல்ஜி ஸ்பீக்கர்களுடன் வழங்கப்படும் லீவியேஷன் ஸ்டேஷனில் சக்திவாய்ந்த மின்காந்தகள் வழங்கப்பட்டுள்ளன. இவை ஸ்பீக்கர்களை சில செமீ உயரத்தில் மிதக்க வைக்கின்றன.
இந்த ஸ்பீக்கர்களில் கவனிக்கப்பட வேண்டிய அம்சமாக இதன் சார்ஜிங் தொழில்நுட்பத்தை கூறலாம். இதற்கு நீங்கள் சார்ஜ் செய்ய வேண்டாம் என்கிறது எல்ஜி. ஆம், ஸ்பீக்கரில் சார்ஜ் தீர்ந்து போகும் பட்சத்தில் இசையில் எவ்வித குறுக்கீடும் இல்லாமல் லீவியேஷன் ஸ்டேஷனில் இருந்து ஸ்பீக்கர்களுக்கு தானாக சார்ஜ் செய்யப்படுகிறது. இந்த அம்சம் மூலம் இடைவிடாத இசையை எந்நேரமும் அனுபவிக்க முடியும் என்றும் ஒரு முறை சார்ஜ் செய்யும் போது 10 மணி நேரத்திற்கு பேக்கப் வழங்கும் என்றும் எல்ஜி தெரிவித்துள்ளது.
தற்சமயம் வெளியாகி இருக்கும் புகைப்படங்களில் எல்ஜி Pj9 ஸ்பீக்கர்கள் அதிக தரம் கொண்ட இசையை வழங்கும் என்றும் சிறப்பான பாஸ் அனுபவம் வழங்கும் என தெரிகிறது. இதற்கென லீவியேஷன் ஸ்டேஷனில் சப்-ஊஃபர் வழங்கப்பட்டுள்ளது.
அனைத்து மேற்பரப்பையும் ஸ்மார்ட்போனின் கீபோர்டு மற்றும் பியானோவாக மாற்றும் புதிய சாதனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
சான்பிரான்சிஸ்கோ:
மொபைல் போன்களில் அதிவேகமாக டைப் செய்வது முன்பு ஒரு காலத்தில் நாம் பயன்படுத்திய பீச்சர்போன்களில் வித்தையாக பார்க்கப்பட்டு வந்தது. பின் அனைவரும் பட்டன் இல்லாத தொடுதிரை வசதி கொண்ட ஸ்மார்ட்போன்களுக்கு மாறியதால் டைப்பிங் மோகம் காலப்போக்கில் மந்தமாகிவிட்டது. மேலும் தொடுதிரையில் டைப்பிங் வெவ்வேறு விதமாக மாறியுள்ளது.
பீச்சர்போன் போன்றே ஸ்மார்ட்போன்களிலும் டைப்பிங் செய்வது எப்போதும் தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கிறது. இதனை கருத்தில் கொண்டு ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோருக்கு டைப்பிங் செய்வதை எளிமையாக்கும் நோக்கில் புதிய தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
கையளவில் இருக்கும் புதிய சாதனம் பெட்டி வடிவில் இருப்பதோடு 'ஐகீபோ' என்றும் பெயரிடப்பட்டுள்ளது. உங்களின் ஸ்மார்ட்போன்களுடன் இணைந்து எவ்வித மேற்பரப்புகளையும் கீபோர்டு போன்று பயன்படுத்த வழி செய்கிறது. ப்ரொஜெக்டர் போன்று காட்சியளிக்கும் ஐகீபோ ஸ்மார்ட்போன்களில் டைப்பிங் செய்வதை எளிமையாக்குவதோடு அனைத்து மேற்பரப்புகளையும் கீபோர்டாக மாற்றிவிடுகிறது. இதனால் நீங்கள் எங்கு சென்றாலும் எளிதாக டைப்பிங் செய்ய முடியும்.
ஐகீபோ சாதனம் ஸ்மார்ட்போன்களில் டைப்பிங் செய்வதை எளிமையாக்குவதோடு, பியானோ இசைக்கருவியையும் சேர்த்து வழங்குகிறது. டைப்பிங் செய்வதுடன் அனைத்து மேற்பரப்புகளிலும் பியானோ இசைக்க செய்கிறது. இசையின் மீது ஆர்வம் கொண்டவர்களும் ஐகீபோ கொண்டு தங்களின் திறமைகளை வளர்த்து கொள்ளலாம். பியானோ கொண்டு விளையாடவும் இனி ஸ்மார்ட்போன் மட்டும் போதுமானது.
பார்வை பறிபோனவர்களாக இருட்டு வாழ்க்கைக்குள் சிக்கித் தவிக்கும் பலருக்கு பார்வையளிக்கும் புதிய தொழில்நுட்பம் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டு, கைமேல் பலனளிக்க தொடங்கியுள்ளது.
லண்டன்:
செகண்ட் சைட் எனும் நிறுவனம் 'பயோனிக் ஐ' என்ற பெயரில் சாதனை கண்டுபிடிப்பு ஒன்றை வெற்றிகரமாக அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த பயோனிக் ஐ சாதனத்தின் மூலம் பார்வை பறிபோனவர்களுக்கு மீண்டும் பார்வையைளிக்க முடியும் என்பதை பிரிட்டன் நாட்டை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் நிரூபித்துள்ளனர்.
லண்டன் அரசாங்கத்தின் தேசிய சுகாதார சேவையின் சார்பில் தேர்வு செய்யப்பட்ட பார்வை பறிபோன பத்து பேருக்கு கண் பார்வையளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மருத்துவ சிகிச்சை இரண்டு மருத்துவமனைகளில் வழங்க ஏற்பாடு செய்யப்படவுள்ளது.

இந்த கருவி அடுத்த மாதத்தில் 10 பேருக்கு இலவசமாக பொருத்தப்பட இருக்கிறது. மான்செஸ்டர் ராயல் கண் மருத்துவமனையில் ஐந்து பேருக்கும், மூர்ஃபீல்ட்ஸ் கண் மருத்துவமனையில் ஐந்து பேருக்கும் செயற்கை கண் வழங்குவதற்கான சிகிச்சையளிக்கப்பட இருக்கிறது.
அதிவேகமாக காட்சிகளை படமாக்கும் 500 பிக்ஸல்ஸ்களை கொண்ட நவீன கேமரா, படமாக்கப்பட்ட புகைப்படங்களை திறன்பட மூளைக்கு பரிமாற்றம் செய்ய சிப்செட்கள் மற்றும், காட்சியை மூளை மண்டலத்துக்கு அனுப்பி, பிம்பமாக்கி பார்வையை வழங்கும் அதிநவீன கண்ணாடிகள் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி, இடைக்காலத்தில் முற்றிலும் பார்வை பறிபோனவர்களுக்கும் பார்வையை வழங்க இந்த 'பயோனிக் ஐ' உதவுகின்றது.
அறுவை சிகிச்சை மூலம் பயோனிக் ஐ பொருத்தப்படுகிறது. பயோனிக் ஐ மூலம் படமாக்கப்பட்ட புகைப்படங்கள் மூளையின் பார்வையை வழங்கும் நரம்புகளுக்கு அனுப்புகிறது. பின் மூளையில் இருந்து பயனர் ஒளியின் மூலம் புகைப்படங்கள் பிரதிபலிக்கப்படுகின்றன.
முன்னதாக, இந்த புதிய முறையின் மூலம் மீண்டும் கண்பார்வையை வழங்கும் பரிசோதனைகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் பயோனிக் ஐ பொருத்தப்பட்ட சிலரால் பெரிய எழுத்துகளையும் பார்க்க முடிந்தது என மான்செஸ்டர் மருத்துவமனையின் பேராசிரியர் பாலோ ஸ்டங்கா தெரிவித்துள்ளார்.
தற்சமயம் முதற்கட்ட சோதனைகள் வெற்றியடைந்து, விரைவில் பரவலான பயன்பாட்டிற்கு 'பயோனிக் ஐ' சாதனம் வரவுள்ள நிலையில், தொடர்ச்சியான அடுத்தகட்ட ஆய்வுகளின் பலனாக இந்த தொழில்நுட்பம் பல்வேறு பரிமாணங்களை கடந்து, வளர்ச்சியடைந்து ஒருகட்டத்தில் அதிக தரம் கொணட் காட்சிகளை பார்க்க வழிவகுக்கும் என ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
அசுஸ் நிறுவனத்தின் மூன்றாம் தலைமுறை ஸ்மார்ட்வாட்ச் சாதனங்கள் இன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றன.
புதுடெல்லி:
அசுஸ் நிறுவனத்தின் சென்வாட்ச் 3 சாதனம் இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்ச் பிளிப்கார்ட் தளத்தில் மட்டும் பிரத்தியேகமாக விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றின் முன்பதிவு இன்றே துவங்கிவிட்டது. புதிய அசுஸ் சென்வாட்ச்'களின் விலை 17,599 ரூபாய் முதல் துவங்குகின்றது.
அசுஸ் சென்வாட்ச் 3 வகையில் மொத்தம் மூன்று மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. WI503Q-1LDBR0015 மாடல் கன்மெட்டல் கேஸ் கொண்டிருக்கிறது. இதன் விலை 18,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. WI503Q-2RBGE0007 மாடல் சில்வர் கேஸ் கொண்டுள்ளது, இதன் விலை ரூ.17,599 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை ஜனவரி மாதம் துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரோஸ் கோல்டு நிறம் கொண்ட சென்வாட்ச் இந்தியாவில் விற்பனை செய்யப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அசுஸ் சென்வாட்ச் 3 ஆண்ட்ராய்டு வியர் 1.39 இன்ச் Amoled டிஸ்ப்ளே மற்றும் 400x400 பிக்சல் ரெசல்யூஷன் கொண்டுள்ளது. இதில் சென்ஃபிட் டிராக்கிங் செயலியும் இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளது. இந்த செயலி ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன்களில் வேலை செய்யும் திறன் கொண்டுள்ளது.
சென்வாட்ச் 3 குவால்காம் ஸ்னாப்டிராகன் 2100 சிப்செட், 512 எம்பி ரேம் மற்றும் 4GB இன்டெர்னல் மெமரி வழங்கப்பட்டுள்ளது. 341 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் சென்வாட்ச் 3 இரண்டு நாட்கள் பேட்டரி பேக்கப் கிடைக்கிறது. ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளதால் 60 சதவிகித சார்ஜ் செய்ய 15 நிமிடங்களே போதுமானது.
புதிய ஸ்மார்ட்வாட்ச் சாதனங்களில் புதிய ஃபிட்னஸ் அம்சங்களும் வழங்கப்பட்டிருக்கின்றன. இந்த அம்சங்கள் தகவல்களை சுமார் 95 சதவிகிதம் துல்லியத்தோடு வழங்கும் திறன் கொண்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்ஃபிட் செயலி வாடிக்கையாளர் மேற்கொள்ளும் வெவ்வேறு உடற்பயிற்சிகளையும் டிராக் செய்யும்.
ஆப்பிள் நிறுவனம் அடுத்து வெளியிட இருக்கும் ஸ்மார்ட் வாட்ச் அம்சங்கள் குறித்த தகவல்கள் இணைத்தில் கசிந்திருக்கின்றது.
புதுடெல்லி:
ஆப்பிள் நிறுவனம் அடுத்த ஆண்டு வெளியிட இருக்கும் ஆப்பிள் வாட்ச் குறித்த புதிய தகவல்கள் இணையத்தில் வெளியகியுள்ளன. அமெரிக்க காப்புரிமை அலுவலகத்தில் ஆப்பிள் பெற்றிருக்கும் காப்புரிமைகளில் ஆப்பிள் வாட்ச் சிறப்பம்சங்கள் சார்ந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன் படி புதிய ஆப்பிள் வாட்ச் சாதனத்தில் ஹாப்டிக் சென்சார்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட ஹாப்டிக் சாதனங்களுடன் இணைந்து கன நேரத்தில் செயல்பட கூடியதாகும். இந்த தொழில்நுட்பம் மூலம் வாடிக்கையாளர்களுக்கு வர இருக்கும் அழைப்புகள் மற்றும் இதர நோட்டிபிகேஷன்கள் குறித்து எச்சரிக்கை செய்யப்படும்.
எனினும் இந்த அம்சத்தினை அடுத்து வெளியாக இருக்கும் ஆப்பிள் வாட்ச் சாதனத்தில் கட்டாயம் வழங்கப்படுமா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. ஆப்பிள் நிறுவனம் ஏற்கனவே வெளியிட்ட ஆப்பிள் வாட்ச் சாதனங்களையே சரி செய்து மறு விற்பனை செய்து வருகிறது. இந்த விற்பனை அமெரிக்காவில் மட்டும் நடைபெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.
ஆப்பிள் வரலாற்றில் ஸ்மார்ட்வாட்ச் சாதனங்கள் மறு பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறை ஆகும். 2015 ஆம் ஆண்டு ஆப்பிள் வாட்ச் சாதனங்கள் உலக சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டன. ஆப்பிளின் ஆன்லைன் சந்தைகளில் ஆப்பிள் வாட்ச் 1 மற்றும் ஆப்பிள் வாட்ச் 2 சாதனங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.






