என் மலர்tooltip icon

    செய்திகள்

    அடுத்த வாரம் வெளியீடு - காற்றில் மிதக்கும் ஸ்பீக்கர்கள்: எல்ஜி அறிவிப்பு
    X

    அடுத்த வாரம் வெளியீடு - காற்றில் மிதக்கும் ஸ்பீக்கர்கள்: எல்ஜி அறிவிப்பு

    அமெரிக்காவில் அடுத்த வாரம் நடைபெற இருக்கும் விழாவில் எல்ஜி நிறுவனம் காற்றில் மிதக்கும் ஸ்பீக்கர்களை வெளியிட இருப்பதாக அறிவித்துள்ளது.
    சியோல்: 

    அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் அடுத்த வாரம் அதாவது ஜனவரி 5 முதல் ஜனவரி 8 ஆம் தேதி வரை நுகர்வோர் மின்சாதன திருவிழா (CES 2017) நடைபெற உள்ளது. இவ்விழாவில் ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு புதிய ரக தொழில்நுட்ப சாதனங்கள் அறிமுகம் செய்யப்படும். அந்த வகையில் எல்ஜி நிறுவனம் தயாரித்து இருக்கும் காற்றில் மிதக்கும் ஸ்பீக்கர்களும் இவ்விழாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. 

    எல்ஜி நிறுவனம் அறிமுகம் செய்ய இருக்கும் இந்த ஸ்பீக்கர்கள் ப்ளூடூத் தொழில்நுட்பம் சார்ந்து இயங்கும் என்பதோடு காற்றில் எவ்வித உதவியும் இன்றி மிதக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எல்ஜி அறிமுகம் செய்ய இருக்கும் புதிய ப்ளூடூத் ஸ்பீக்கர் எல்ஜி Pj9  என பெயரிடப்பட்டுள்ளது. 

    புதிய எல்ஜி Pj9 ஸ்பீக்கர்களுடன் 'லீவியேஷன் ஸ்டேஷன்' (Leviation Station) வழங்கப்படுகிறது. இந்த லீவியேஷன் ஸ்டேஷன் ஸ்பீக்கர்களின் சார்சிங் டாக் போன்று இயங்குவதோடு ஸ்பீக்கர்களை காற்றிலும் மிதக்கச் செய்கிறது. எல்ஜி ஸ்பீக்கர்களுடன் வழங்கப்படும் லீவியேஷன் ஸ்டேஷனில் சக்திவாய்ந்த மின்காந்தகள் வழங்கப்பட்டுள்ளன. இவை ஸ்பீக்கர்களை சில செமீ உயரத்தில் மிதக்க வைக்கின்றன. 

    இந்த ஸ்பீக்கர்களில் கவனிக்கப்பட வேண்டிய அம்சமாக இதன் சார்ஜிங் தொழில்நுட்பத்தை கூறலாம். இதற்கு நீங்கள் சார்ஜ் செய்ய வேண்டாம் என்கிறது எல்ஜி. ஆம், ஸ்பீக்கரில் சார்ஜ் தீர்ந்து போகும் பட்சத்தில் இசையில் எவ்வித குறுக்கீடும் இல்லாமல் லீவியேஷன் ஸ்டேஷனில் இருந்து ஸ்பீக்கர்களுக்கு தானாக சார்ஜ் செய்யப்படுகிறது. இந்த அம்சம் மூலம் இடைவிடாத இசையை எந்நேரமும் அனுபவிக்க முடியும் என்றும் ஒரு முறை சார்ஜ் செய்யும் போது 10 மணி நேரத்திற்கு பேக்கப் வழங்கும் என்றும் எல்ஜி தெரிவித்துள்ளது. 

    தற்சமயம் வெளியாகி இருக்கும் புகைப்படங்களில் எல்ஜி Pj9 ஸ்பீக்கர்கள் அதிக தரம் கொண்ட இசையை வழங்கும் என்றும் சிறப்பான பாஸ் அனுபவம் வழங்கும் என தெரிகிறது. இதற்கென லீவியேஷன் ஸ்டேஷனில் சப்-ஊஃபர் வழங்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×