என் மலர்tooltip icon

    புதிய கேஜெட்டுகள்

    ஸ்மார்ட்போனில் எக்ஸ்-ரே வசதி வழங்கும் புதிய ஸ்மார்ட்போன் ஆப் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதை கொண்டு நீங்கள் நினைக்கும் பொருளினுள் என்ன இருக்கிறது என்பதை ஸ்மார்ட்போன் கொண்டு பார்க்க முடியும்.
    லண்டன்: 

    அடுத்த முறை ஏதேனும் பழ வகைகளை சாப்பிடும் முன் அதனுள் ஏதேனும் புழு அல்லது பூச்சிகள் இருக்கிறதா என்பதை ஸ்மார்ட்போன் கொண்டு நேரடியாக பார்க்க முடியும். பொறியாளர்கள் உருவாக்கியுள்ள புதிய ஆப் மூலம் பொருளை ஸ்கேன் செய்து அதனுள் இருப்பதை அறிந்து கொள்ள முடியும்.   

    ஃபிரான்ஹோஃபர் ஃபேக்ட்ரி ஆப்பரேஷன் மற்றும் ஆட்டோமேஷன் நிறுவனத்தை சேர்ந்த பொறியாளர்கள் ஹாக்ஸ்பெக்ஸ் மொபைல் (HawkSpex mobile) எனும் செயலியை உருவாக்கியுள்ளனர். இந்த செயலி பொருட்களை ஸ்மார்ட்போன் மூலம் ஸ்கேன் செய்து அதனுள் இருப்பதை கண்டறிய வழி செய்கிறது. 

    எடுத்துக் காட்டாக ஆப்பிள் பழம் ஒன்றை ஸ்கேன் செய்ய வேண்டுமெனில் ஹாக்ஸ்பெக்ஸ் செயலியை ஸ்மார்ட்போனில் ஓபன் செய்து பழத்தை ஸ்கேன் செய்ய வேண்டும். ஸ்கேன் செய்யப்பட்டதும் ஆப்பிள் பழத்தில் இருக்கும் பூச்சிக் கொல்லி எச்சங்கள் மற்றும் அதன் உறுப்புக்கள் ஸ்மார்ட்போன் திரையில் தெரியும். 

    சந்தையில் ஏற்கனவே பல்வேறு ஸ்கேனிங் சாதனங்கள் இருந்தாலும் இவை ஸ்மார்ட்போனில் கூடுதலாக பிரிசம் ஒன்றை இன்ஸ்டால் செய்தால் மட்டுமே வேலை செய்யும். ஆனால் இந்த செயலி இருந்தாலே போதுமானது, இத்துடன் ஸ்மார்ட்போன் கேமரா மட்டும் கொண்டு ஸ்கேன் செய்யலாம். 

    இந்த செயலியை கொண்டு உணவு வகைகளின் தரம் மற்றும் விவசாயம் சார்ந்த பயன்பாடுகளை பெற முடியும். இந்த செயலி வணிக பயன்பாட்டிற்கு இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    சோனி நிறுவனம் ரகசியமாக உருவாக்கி வரும் மர்ம ஸ்மார்ட்போன் சார்ந்த தகவல்கள் ப்ளூடூத் எஸ்ஐஜி மூலம் தெரியவந்துள்ளது. இந்த ஆண்டு சோனி நிறுவனம் ஐந்து ஸ்மார்ட்போன்களை வெளியிடும் என கூறப்பட்டது.
    டோக்கியோ:

    இம்மாதம் பார்சிலோனாவில் நவடைபெற இருக்கும் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் சோனி நிறுவனம் ஐந்து ஸ்மார்ட்போன்களை வெளியிடலாம் என செய்திகள் வெளியாகின. எனினும் இவற்றின் சிறப்பம்சங்கள் மற்றும் இதர தகவல்கள் வெளியாகாமல் மர்மமாகவே இருந்தது.  

    இந்நிலையில் சோனி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் தயாரிக்கப்படுவது ப்ளூடூத்  SIG மூலம் தெரியவந்துள்ளது. சில தினங்களுக்கு முன் வெளியாகி இருக்கும் இத்தகவல் அந்நிறுவனம் வெளியிட இருப்பதாக கூறப்பட்ட ஐந்து ஸ்மார்ட்போன்களில் ஒன்றாக இந்த ஸ்மார்ட்போன் இருக்கலாம் என கூறப்படுகின்றது.

    முன்னதாக குறிப்பிட்டதை போன்றே இந்த ஸ்மார்ட்போன் குறித்து அதிகளவு தகவல்கள் வெளியாகவில்லை. தற்சமயம் வரை இந்த ஸ்மார்ட்போனில் ப்ளூடூத் 4.1 வசதி வழங்கப்படுவது மட்டும் உறுதியாகியுள்ளது.   

    ஏற்கனவே வெளியாகி இருக்கும் தகவல்களில் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட் கொண்டு இயங்கும் ஸ்மார்ட்போன் ஒன்றை சோனி நிறுவனம் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 4K டிஸ்ப்ளே வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகின்றது.
    ஒய்வற்று உழைப்போருக்கு சற்று நேரம் ஆறுதலாகவும், உடலுக்கு ஆரோக்கிய நன்மைகளை அளிக்கும் புதிய கேம் உருவாக்கப்பட்டுள்ளது. விர்ச்சுவல் ரியாலிட்டி தொழில்நுட்பத்தின் துணை கொண்டுள்ள இந்த கேம் பற்றி இங்கு பார்ப்போம்.
    சியோல்:

    நாம் வாழும் டென்ஷன் நிறைந்த வாழ்க்கையில் அவ்வப்போது சிறிய இடைவெளி கட்டாயம் தேவைப்படும். அவ்வாறான சமயங்களில் உட்கார்ந்த இடத்திலேயே எதையாவது செய்யாமல் உடல் அசையும் சில பயிற்சிகளை செய்யலாம். ஓய்வு நேரத்திலும் பயிற்சியா என்பவர்கள் விளையாடவும் செய்யலாம். இது அவரவர் விருப்பம் தான்.  

    நிறைய பேருக்கு விளையாட்டில் ஆர்வம் இருந்நாலும் வெளியில் செல்வதை தவிர்த்து ஒரே இடத்தில் இருப்பர். வீட்டில் இருந்த படியே வெளி உலகிற்கு உங்களை அழைத்து செல்ல புதிய தொழில்நுட்பம் (விர்ச்சுவல் ரியாலிட்டி) உதவியாக இருக்கும். உண்மையில் நமக்கு அறிமுகமாகி சில காலம் ஆகிவிட்டாலும் இன்றும் இது புதிய தொழில்நுட்பமாகவே பார்க்கப்படுகிறது.

    விர்ச்சுவல் ரியாலிட்டி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி புதிய கேம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. ஜாகர் (Jogger) என பெயரிடப்பட்டுள்ள இந்த கேம் ஆகுலஸ் இணையதளத்தில் கிடைக்கின்றது. ஆகுலஸ் விர்ச்சுவல் ரியாலிட்டி சாதனத்தில் கிடைக்கும் இந்த கேம் உங்களை கற்பனை உலகிற்கு அழைத்து செல்கிறது.

    பொம்மை படம் போன்ற உலகில் நடக்கும் இந்த கேமில் வேற்றுகிரக வாகனம் உங்களை துரத்தும், அவ்வப்போது உங்களை சுட முயற்சிக்கும். இவைகளில் இருந்து நீங்கள் தப்பி ஓடுவதே இந்த கேமின் நோக்கமாக அமைக்கப்பட்டுள்ளது. இத்துடன் மற்ற கேம்களை போன்று இல்லாமல் இதில் நீங்கள் உங்களின் உடலை அசைக்க வேண்டும். அதாவது நிஜத்தில் ஓடினால் மட்டுமே கேமில் உங்களால் முன்னேற முடியும்.

    ஜாகர் கேம் விளையாடும் போது உங்கள் மூளை மட்டுமில்லாமல் உடலுக்கும் பயிற்சி கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

    இந்த கேம் எவ்வாறு இருக்கிறது என்பதை வீடியோ வடிவில் பார்க்கலாம்..

    எந்நேரமும் நாம் பயன்படுத்தும் ஸ்மார்ட்போன்களில் அதிகப்படியான கிருமிகள் இருக்கும். இனிமேல் எவ்வித கவலையும் இன்றி போனை சுத்தம் செய்ய வெந்நீர் மற்றும் சோப் பயன்படுத்தலாம் என்கிறது கியோசிரா.
    டோக்கியோ:

    இன்று வெளியாகும் பல்வேறு ஸ்மார்ட்போன்களிலும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது. இவை ஸ்மார்ட்போன்கள் தண்ணீரில் நனைந்தாலும், சில விநாடிகளில் இருந்து நிமிடங்கள் வரை தண்ணீரில் இருந்தாலும் எதுவும் ஆகாமல் பார்த்துக் கொள்கிறது.

    ஆனால், கியோசிரா எனும் ஜப்பான் நிறுவனம் தயாரித்துள்ள புதிய ஸ்மார்ட்போன் வாட்டர் ரெசிஸ்டண்ட் ஸ்மார்ட்போன்களையே மிஞ்சும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தண்ணீரில் நனைந்தால் பாழாகாது என்பதோடு வெந்நீர் மற்றும் சோப்பு கட்டிகள் மூலம் பாதிக்கப்படாத வகையில் கியோசிராவின் ரஃபேர் (Kyocera Rafre) ஸ்மார்ட்போன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    கியோசிரா ரஃபேர் ஸ்மார்ட்போனின் தொடுதிரையை ஈரமான கைகளை கொண்டும், கையுறை அணிந்து கொண்டும் பயன்படுத்த முடியும். சமையலறை கருப்பொருள் (Theme) சார்ந்து வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போனில் சமையல் ஆப் ஒன்று இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளது. இந்த செயலியை கை சைகை மூலமாகவும் இயக்க முடியும்.

    சிறப்பம்சங்களை பொருத்த வரை கியோசிரா ரஃபேர் 5.0 இன்ச் திரை, 2 ஜிபி ரேம், 16 ஜிபி இன்டெர்னல் மெமரி, 13 எம்பி பிரைமரி கேமரா மற்றும் 3000 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது. ஆண்ட்ராய்டு 7.0 இயங்குதளம் கொண்டு இயங்கும் இந்த ஸ்மார்ட்போனில் வழக்கமான ஸ்பீக்கர் வழங்கப்படவில்லை.  

    மற்ற ஸ்மார்ட்போன்களில் வழங்கப்படும் வழக்கமான ஸ்பீக்கர்கள் இல்லாததால் வாட்டர் ப்ரூஃப் திறன் வசதி மேலும் சிறப்பாக இருக்கிறது. ஸ்பீக்கர் இல்லாததால் ஸ்மார்ட் சோனிக் ரிசீவர் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இந்த தொழில்நுட்பம் சத்தத்தை அதிர்வுகளாக பிரதிபலிக்கும். இதே போன்ற தொழில்நுட்பம் Mi Mix சாதனத்திலும் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  

    எனினும் உலகின் முதல் சோப்-ரெசிஸ்டண்ட் போனாக இது அமைந்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனை அனைத்துவித சோப்களை கொண்டும் சுத்தம் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மோட்டோரோலாவின் மோட்டோ Z (2017) ஸ்மார்ட்போனில் கூடுதல் பாதுகாப்பு வழங்கும் நோக்கில் ஐரிஸ் ஸ்கேனர் தொழில்நுட்பம் வழங்கப்படலாம்.
    பீஜிங்:

    லெனோவோவின் மோட்டோரோலா நிறுவனம் புதிய ஸ்மார்ட்போன்களை இந்த ஆண்டு நடைபெற இருக்கும் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதை தொடர்ந்து அந்நிறுவனத்தின் மோட்டோ Z (2017) ஸ்மார்ட்போன் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    அந்த வகையில் மோட்டோ Z (2017) ஸ்மார்ட்போன் ஐரிஸ் ஸ்கேனர் கொண்டிருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. காப்புரிமை பதிவுகளில் இருந்து இத்தகவல் வெளியாகியுள்ளது. ஐரிஸ் ஸ்கேனர் லென்ஸ் ஆனது செல்ஃபி கேமரா இருக்கும் இடத்திலேயே பொருத்தப்படும் என காப்புரிமை புகைப்படங்கள் தெரிவிக்கின்றன.



    இந்த லென்ஸ் வாடிக்கையாளர்கள் போனினை நேரடியாக பார்க்கவில்லை என்றாலும், ஒரு ஓரத்தில் இருந்து பார்க்கும் போதும் வேலை செய்யுமாம். புதிய ஐரிஸ் ஸ்கேனர் வழங்கப்பட்டாலும், வழக்கமான கைரேகை ஸ்கேனர் வசதி ஹோம் பட்டனிலேயே வழங்கப்படும் என தெரியவந்துள்ளது.

    சமீபத்தில் புதிய மோட்டோரோலா ஸ்மார்ட்போன் ஒன்று சீன இணையத்தளத்தில் XT1650 என்ற மாடல் எண் கொண்டிருந்தது. இந்நிலையில் இந்த ஸ்மார்ட்போன் தான் மோட்டோ Z (2017) என கூறப்படுகின்றது. தற்சமயம் வெளியாகியிருக்கும் தகவல்களும், முன்பு வெளியான புகைப்படங்களை ஒப்பிடும் போது இரு சாதனங்களும் ஒரே ஸ்மார்ட்போன் தான் என்பதை உறுதி செய்துள்ளதாக கூறப்படுகின்றது.

    சிறப்பம்சங்களை பொருத்த வரை மோட்டோ Z (2017) ஸ்மார்ட்போனில் குவால்காம் நிறுவனத்தின் சமீபத்திய 835 சிப்செட் வழங்கப்படலாம் என்றும் இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகின்றது. இத்துடன் ஆண்ட்ராய்டு 7.1.1 நௌக்கட் இயங்குதளம் வழங்கப்படும் என்றும் கூறப்படுகின்றது.  

    மோட்டோ Z ஸ்மார்ட்போன் 2016 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இத்துடன் மோட்டோ மாட்ஸ் வழங்கப்பட்டது. இவற்றில் 16-டாட் மாக்னெடிக் கோல்டு பிளேட் கனெக்டர் வழங்கப்பட்டிருந்தது. இவை எல்ஜி நிறுவனத்தின் ஜி5 ஸ்மார்ட்போன்களை விட எளிமையாக பயன்படுத்த கூடியதாக இருந்தது.  

    சிறப்பம்சங்களை பொருத்த வரை மோட்டோ Z ஸ்மார்ட்போனில் 5.5 இன்ச் குவாட் எச்டி டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 820 சிப்செட், 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி நீட்டிக்கும் மெமரி வசதி வழங்கப்பட்டது. இத்துடன் 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ், 5 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டது.   

    தற்சமயம் வெளியாகியிருக்கும் தகவல்களில் மோட்டோ Z (2017), மோட்டோ ஜி5 மற்றும் ஜி5 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் பார்சிலோனாவில் பிப்ரவரி 27- மார்ச் 2 வரை நடைபெறும் மாநாட்டில் அறிமுகம் செய்யப்படலாம் என்றே தெரிவிக்கின்றன.  
    ஹூவாய் நிறுவனம் தனது புதிய வாட்ச் 2 சாதனத்தை அடுத்த மாதம் நடைபெற இருக்கும் சர்வதேச விழாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
    பீஜிங்: 

    ஹீவாய் நிறுவனத்தின் புதிய வாட்ச் 2 சாதனம் அடுத்த மாதம் நடைபெற இருக்கும் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இத்துடன் இந்த சாதனத்தில் கூகுளின் ஆண்ட்ராய்டு வியர் 2.0 மென்பொருள் வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகின்றது. 

    ஹூவாய் நிறுவனத்தின் புதிய வாட்ச் 2 சாதனத்தில் எல்டிஇ தொழில்நுட்பம் வழங்கப்படும் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளது. இதே தொழில்நுட்பம் சாம்சங் கியர் S3 ஸ்மார்ட்வாட்ச் சாதனத்திலும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

    வெளியாக இருக்கும் ஹூவாய் வாட்ச் முந்தைய பதிப்பை விட சிறப்பான வடிவமைப்பை கொணடிருக்கும் என்றும் ஹூவாய் வாட்ச் 2 இரண்டு மாடல்களில் வெளியாகும் என்றும் கூறப்படுகின்றது. ஒரு மாடலில் பில்ட்-இன் சிம் கார்டு வழங்கப்படுகிறது. இதனால் ஸ்மார்ட்போன் இல்லாமலும் பயன்படுத்த முடியும். பில்ட்-இன் எல்டிஇ தொழில்நுட்பம் வை-பை நெட்வொர்க் இல்லாத இடங்களிலும், இணைக்கப்பட்ட ஸ்மார்ட்போன்களில் அழைப்புகளை மேற்கொள்ள முடியாத போதும் பயன்படுத்தலாம்.  

    ஹூவாய் வாட்ச் 2 சாதனத்தில் ஆண்ட்ராய்டு வியர் 2.0 வழங்கப்பட்டுள்ளதால் தனிப்பட்ட செயலிகளை இயக்கும் வசதி வழங்கப்படுகின்றது. இறுதியாக வெளியிடப்பட்ட ஆண்ட்ராய்டு வியர் 2.0 பிரீவியூவில் ஐபோன்களில் இயங்கும் திறன் காணப்பட்டது. இதனால் ஆண்ட்ராய்டு வியர் 2.0 மென்பொருளை ஐபோனிலும் பயன்படுத்த முடியும். 

    மேம்படுத்தப்பட்ட இயங்குதளங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்வாட்ச்களுக்கென பிரத்தியேக பிளே ஸ்டோர்களை கொண்டுள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு பிடித்த செயலிகளை பிரவுஸ் செய்து பயன்படுத்தலாம். 

    முன்னதாக வெளியிடப்பட்ட ஹூவாய் வாட்ச் 1.4 இன்ச் டிஸ்ப்ளே, 1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் 400 சிப்செட் 512 எம்பி ரேம், 4ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்டிருந்தது. இத்துடன் 300 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரியும் வழங்கப்பட்டது. இந்தியாவில் ஹூவாய் வாட்ச் ரூ.22,999 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது. புதிய ஹூவாய் வாட்ச் 2 முந்தைய பதிப்பை விட அதிக அம்சங்களை கொண்டிருக்கும் என்பதால் இதன் விலை அதிகமாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது.
    ஸ்பெயின் நாட்டின் ஆராய்ச்சியாளர்கள் பிரத்தியேக 3D பயோபிரின்டர் ஒன்றை உருவாக்கியுள்ளனர். இந்த சாதனம் மூலம் மனித உடலில் பொருந்தி இயங்கும் செயற்கை தோலை உருவாக்க முடியும்.
    மேட்ரிட்:

    ஸ்பெயின் நாட்டை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் வித்தியாசமான 3D பயோபிரின்டர் சாதனம் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இதன் மூலம் மனித உடலில் கச்சிதமாக பொருந்தி இயங்கக் கூடிய 'செயற்கை தோலை' உருவாக்க முடியும். இந்த செயற்கை தோல் கொண்டு ஆராய்ச்சி பணிகளை தவிர்த்து ஒப்பனை மற்றும் இரசாயனம் சார்ந்த பொருட்களை சோதிக்கவும், மனித உடலில் பொருத்தி கொள்ளவும் முடியும். 

    ஆய்வாளர்கள் கண்டறிந்திருக்கும் புதிய பயோபிரின்டர் மூலம் உருவாக்கப்படும் தோல் மனித உடலில் ஏற்கனவே இருக்கும் தோல் பகுதியின் மேல்புறமாக பொருத்தப்படும், இது உள்ளிருக்கும் தோல் பகுதியை வெளிப்புற சூழ்நிலைகளில் இருந்து பாதுகாக்க உதவுகிறது. 

    இந்த செயற்கை தோலினை நோயாளிகள் மீது பயன்படுத்த முடியும் என்பதோடு வியாபார ரீதியாக இரசாயன பொருட்களை சோதனை செய்யவும் பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ள புதிய செயற்கை தோல் இரு விதங்களில் உருவாக்கப்படுகின்றது. 

    முதல் விதமாக அல்லோஜெனிக் தோல் உருவாக்கப்படுகின்றது. இது தொழில்துறை பயன்பாடுகளுக்காக அதிகளவில் உருவாக்கப்படுகின்றது. இரண்டாவது விதமாக ஆட்டோலோகஸ் தோல் மனிதர்களின் உடலில் ஏற்பட்ட தோல் சார்ந்த காயங்களை குணப்படுத்தி இந்த புதிய தோலினை குறிப்பிட்ட பாகத்தில் பொருத்த முடியும். 

    தற்சமயம் ஆராய்ச்சியாளர்கள் மனித உடலில் இருக்கும் திசுக்கள் மற்றும் உயிரணுக்களை கொண்டு உயிரியக்க தோல் வகைகளை உருவாக்கி வருகின்றனர். இது மற்ற முறைகளில் பயன்படுத்தக் கூடிய விலங்கு கொலாஜென்களை பயன்படுத்துவதை தவிர்க்கிறது. மனித தோல்களை அச்சடிக்கும் வழிமுறைக்கான ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

    ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்திருக்கும் புதிய வழிமுறைகள் குறைந்த செலவில் செய்யக் கூடியது என்றும் இவற்றை வணிகம் செய்யும் உரிமைக்கான பேச்சுவார்த்தைகள் பல்வேறு நிறுவனங்களுடன் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
    உலகின் விலை உயர்ந்த ஸ்மார்ட்போனுக்கு கான்ஸ்டெல்லேஷன் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் உள்ளிட்ட தகவல்களை இங்கு பார்ப்போம்.
    லண்டன்:

    விலை உயர்ந்த ஸ்மார்ட்போன்களை தயாரிக்கும் பிரபல வெர்டு (Vertu) நிறுவனம் தனது புதிய வகை ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. கான்ஸ்டெல்லேஷன் (Constellation) என அழைக்கப்படும் இந்த ஸ்மார்ட்போனின் விலை பிப்ரவரி மாதம் 10 ஆம் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. முன்னதாக வெர்டு சிக்னேச்சர் டச் போனின் துவக்க விலை 5 லட்சம் ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. 

    புதிய வெர்டு ஸ்மார்ட்போன் அனோடைஸ் செய்யப்பட்ட அலுமினியம் மற்றும் மென்மையான லெதர் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் சிறப்பம்சங்களை பொருத்த வரை 5.5 இன்ச் QHD AMOLED டிஸ்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மல்லோ இயங்குதளம் கொண்டுள்ளது. இந்த போனின் டிஸ்ப்ளே கீறல் விழாத கிளாஸ் மூலம் பாதுகாக்கப்படுகிறது. 

    குவால்காம் ஸ்னாப்டிராகன் 820 பிராசஸர் மற்றும் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டெர்னல் மெமரியும், மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் வழங்கப்படுகின்றது. இத்தனை சிறப்பம்சங்களை சக்தியூட்ட 3200 எம்ஏஎச் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் வை-பை, ப்ளூடூத், என்எஃப்சி மற்றும் யுஎஸ்பி டைப்-சி கனெக்டிவிட்டி ஆப்ஷன்களும் வழங்கப்பட்டுள்ளது. 

    வழக்கமான வெர்டு சிறப்பம்சங்களான சஃப்பையர் கிரிஸ்டல் டிஸ்ப்ளே மற்றும் மாணிக்கத்தால் செய்யப்பட்ட வெர்டு கான்சியர்ஜ் சேவைக்கான பட்டன் மற்றும் சைலன்ட்சர்கிள் (SilentCircle) என்க்ரிப்ஷன் தொழில்நுட்பம் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. 

    கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட வெர்டு சிக்னேச்சர் டச் ஸ்மார்ட்போன் 5.2 இன்ச் எச்டி டிஸ்ப்ளே, ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 810 பிராசஸர், 4ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டெர்னல் மெமரியும், மெமரியை கூடுதலாக 2000 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டிருந்தது.  

    இத்துடன் 21 எம்பி பிரைமரி கேமரா, டூயல் டோன் எல்இடி பிளாஷ், 2.1 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டது. மேலும் ஆண்ட்ராய்டு 5.1 லாலிபாப் இயங்குதளம் 4ஜி, எல்டிஇ, 3ஜி, வைபை, ப்ளூடூத், ஜிபிஎஸ் மற்றும் என்எஃப்சி போன்ற கனெக்டிவிட்டி ஆப்ஷன்களும் 3160 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் உள்ளிட்ட அம்சங்களும் வழங்கப்பட்டன.
    கூகுள் ஸ்மார்ட்வாட்ச்களை எல்ஜி நிறுவனம் தயாரிக்கும் என செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் புதிய ஸ்மார்ட்வாட்ச் குறித்த புகைப்படம் இணையத்தில் கசிந்துள்ளது.
    சான்பிரான்சிஸ்கோ:

    கூகுள் ஸ்மார்ட்வாட்ச் குறித்த தகவல்கள் கடந்த சில தினங்களுக்கு முன் வெளியானதை தொடர்ந்து இவற்றின் புகைப்படம் இணையத்தில் கசிந்துள்ளது. தற்சமயம் வெளியாகியிருக்கும் தகவல்களில் புதிய ஸ்மார்ட்வாட்ச்கள் வாட்ச் ஸ்போர்ட் மற்றும் வாட்ச் ஸ்டைல் என அழைக்கப்படலாம் என கூறப்படுகின்றது. 

    வாட்ச் ஸ்போர்ட் உயர் ரக மாடலாக இருக்கும் என்றும் வாட்ச் ஸ்டைல் மாற்றக்கூடிய ஸ்டிராப்களை கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகின்றது. மேலே வழங்கப்பட்டுள்ள படங்களில் இடது புறம் இருப்பது வாட்ச் ஸ்போர்ட் மற்றும் வலது புறம் இருப்பது வாட்ச் ஸ்டைல் என்றும் கூறப்படுகின்றது. 

    சிறப்பம்சங்களை பொருத்த வரை எல்ஜி வாட்ச் ஸ்போர்ட் 1.38 இன்ச் 480x480 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே, IP68 சான்று 768 எம்பி ரேம் மற்றும் 4ஜிபி ரேம் கொண்டிருக்கும் என கூறப்படுகின்றது. இத்துடன் 430 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது. மேலும் இந்த ஸ்மார்ட்வாட்ச் டைட்டானியம் மற்றும் டார்க் ப்ளூ நிறங்களில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வை-பை, ஜிபிஎஸ், எல்டிஇ, என்எஃஎப்சி மற்றும் ப்ளூடூத் போன்ற கனெக்டிவிட்டி ஆப்ஷன்களும் இதய துடிப்பு சென்சார் மற்றும் ஆண்ட்ராய்டு பே வசதி உள்ளிட்டவை வழங்கப்படுகின்றது. 

    இதே போல் எல்ஜி வாட்ச் ஸ்டைல் 1.2 இன்ச் 360x360 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே 512 எம்பி ரேம் 4ஜிபி இன்டெர்னல் மெமரி, IP67 சான்று வை-பை, ப்ளூடூத் உள்ளிட்ட கனெக்டிவிட்டி ஆப்ஷன்களும் டைட்டானியம், சில்வர் மற்றும் ரோஸ் கோல்டு நிறங்களில் கிடைக்கும் என கூறப்படுகின்றது.   

    இணையத்தில் வெளியாகியிருக்கும் புகைப்படங்களில் வாட்ச் ஸ்போர்ட் மூன்று பட்டன்கள் கொண்டிருக்கும் என்றும் வாட்ச் ஸ்டைல் ஒரே ஒரு பட்டன் கொண்டிருக்கும் என்றும் இரண்டு வாட்ச்களும் மெட்டாலிக் வடிவமைப்பு கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகின்றது. ஸ்போர்ட்ஸ் பதிப்பில் ரப்பர் ஸ்டிராப் மற்றும் ஸ்டைல் பதிப்பில் லெதர் ஸ்டிராப் வழங்கப்படும் என கூறப்படுகின்றது. இரண்டு ஸ்மார்ட்வாட்ச்களிலும் கூகுள் அசிஸ்டண்ட் வசதி வழங்கப்படும் என்றும் கூறப்படுகின்றது.
    தொழில்நுட்ப சந்தையில் இந்த வராம் அறிமுகம் செய்யப்பட்டு இந்தியாவில் வெளியிடப்பட்ட ஸ்மார்ட்போன்கள் எவை என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.
    புதுடெல்லி:

    ஸ்மார்ட்போன் சந்தையில் கடந்த வாரம் சில புதிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டன. சியோமி நிறுவனம் தனது புதிய ரெட்மி போனினை அறிமுகம் செய்தது. கடந்த ஆண்டு சியோமியின் அதிகம் விற்பனை செய்யப்பட்ட ரெட்மி நோட் 3 போனின் மேம்படுத்தப்பட்ட மாடல் ஆகும்.

    இதே போல் உலகின் முதல் டாங்கோ ஸ்மார்ட்போன் லெனோவோ ஃபேப் 2 ப்ரோ, மற்றும் சாம்சங், விவோ உள்ளிட்ட நிறுவனங்களும் தங்களது ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்தன. இங்கு கடந்த வாரம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட ஸ்மார்ட்போன்களின் பட்டியல் மற்றும் அவற்றின் சிறப்பம்சங்களை விரிவாக பார்ப்போம்.

    சியோமி ரெட்மி நோட் 4


    இதன் விலை ரூ.9,999


    5.5 இன்ச் (1920 x 1080 பிக்சல்) ஃபுல் எச்டி 2.5D டிஸ்ப்ளே
    ஸ்னாப்டிராகன் 625 பிராசஸர்
    2GB ரேம் மற்றும் 32GB மெமரி
    3GB ரேம் மற்றும் 32GB மெமரி
    4GB ரேம் மற்றும் 64GB மெமரி
    MIUI 7 சார்ந்த ஆண்ட்ராய்டு 6.0
    13 எம்பி பிரைமரி கேமரா PDAF, டூயல்-டோன் LED Flash
    5 எம்பி செல்ஃபி கேமரா
    கைரேகை ஸ்கேனர்
    4G VoLTE, வை-பை 802.11 ac
    ப்ளூடூத் 4.2, GPS + GLONASS
    4100 எம்ஏஎச் பேட்டரி

    லெனோவோ ஃபேப் 2 ப்ரோ

    இதன் விலை ரூ.29,999

    6.4 இன்ச் (2560x1440 பிக்சல்) குவாட் எச்டி 2.5D டிஸ்ப்ளே
    ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 652 பிராசஸர்
    4GB ரேம் மற்றும் 64GB மெமரி
    ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மல்லோ
    16 எம்பி பிரைமரி கேமரா PDAF
    8 எம்பி செல்ஃபி கேமரா
    கைரேகை ஸ்கேனர்
    4G VoLTE
    4050 எம்ஏஎச் பேட்டரி

    சாம்சங் கேலக்ஸி C9  ப்ரோ

    இதன் விலை ரூ.31,690

    6.0 இன்ச் (1920x1080 பிக்சல்) ஃபுல் எச்டி AMOLED 2.5D டிஸ்ப்ளே
    ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 653 பிராசஸர்
    6GB ரேம் மற்றும் 64GB மெமரி
    ஆண்ட்ராய்டு 6.0.1 மார்ஷ்மல்லோ
    16 எம்பி பிரைமரி கேமரா, டூயல்-டோன் LED Flash
    16 எம்பி செல்ஃபி கேமரா
    கைரேகை ஸ்கேனர்
    4G VoLTE
    4000 எம்ஏஎச் பேட்டரி

    விவோ வி5 பிளஸ்


    இதன் விலை ரூ.15,999

    5.5 இன்ச் (1920x1080 பிக்சல்) ஃபுல் எச்டி 2.5D டிஸ்ப்ளே
    2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 625 பிராசஸர்
    4GB ரேம் மற்றும் 64GB மெமரி
    16 எம்பி பிரைமரி கேமரா PDAF, LED Flash
    20 எம்பி செல்ஃபி கேமரா
    8 எம்பி இரண்டாவது செல்ஃபி கேமரா
    கைரேகை ஸ்கேனர்
    4G VoLTE
    3160 எம்ஏஎச் பேட்டரி

    மைக்ரோமேக்ஸ் விடியோ 3


    இதன் விலை ரூ.6000

    5.0 இன்ச் (1280x720 பிக்சல்) எச்டி IPS டிஸ்ப்ளே
    குவால்காம் ஸ்னாப்டிராகன் பிராசஸர்
    1GB ரேம் மற்றும் 8GB மெமரி
    ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மல்லோ
    5 எம்பி பிரைமரி கேமரா, LED Flash
    2 எம்பி செல்ஃபி கேமரா
    4G VoLTE
    2000 எம்ஏஎச் பேட்டரி

    மைக்ரோமேக்ஸ் விடியோ 4

    இதன் விலை ரூ.6,999

    5.0 இன்ச் (1280x720 பிக்சல்) எச்டி IPS டிஸ்ப்ளே
    1.1 ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் 210 பிராசஸர்
    1GB ரேம் மற்றும் 8GB மெமரி
    ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மல்லோ
    8 எம்பி பிரைமரி கேமரா, LED Flash
    2 எம்பி செல்ஃபி கேமரா
    4G VoLTE
    4000 எம்ஏஎச் பேட்டரி

    சாம்சங் கேலக்ஸி J2 ஏஸ்

    இதன் விலை ரூ.8,490


    5.0 இன்ச் (960x540 பிக்சல்) டிஸ்ப்ளே
    1.4 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் மீடியாடெக் பிராசஸர்
    1.5GB ரேம் மற்றும் 8GB மெமரி
    ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மல்லோ
    8 எம்பி பிரைமரி கேமரா, LED Flash
    5 எம்பி செல்ஃபி கேமரா
    4G VoLTE
    2600 எம்ஏஎச் பேட்டரி
    ஸ்மார்ட்போன்களுக்கு வேகமாக சார்ஜ் செய்ய உதவும் புதிய தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
    லண்டன்:

    லித்தியம் அயன் பேட்டரிகளை பயன்படுத்தும் ஸ்மார்ட்போன் மற்றும் இதர சாதனங்களை வேகமாக சார்ஜ் செய்ய உதவும் வழிமுறையை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இதன் மூலம் பேட்டரியின் இயக்கத்தையும் மேம்படுத்த முடியும் என அவர்கள் தெரிவித்துள்ளனர். 

    ரீசார்ஜ் செய்யக் கூடிய லித்தியம் அயன் பேட்டரிகள் மொபைல் போன், லேப்டாப், டேப்லெட் கணினிகளில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து லித்தியம் அயன் பேட்டரிகளை மின்சாதன கார்களிலும் பயன்படுத்தும் நோக்கில் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. இவை மின்சக்தியை சூரியசக்தி மற்றும் காற்றில் இருந்து சேமிக்கும் திறன் கொண்டுள்ளது. 

    இந்நிலையில் லண்டனின் பேத் பல்கலைக்கழகம் மற்றும் சிகாகோவின் இல்லினியோஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் பேட்டரிகளின் இயக்கத்தை மேம்படுத்தி அவற்றை வேகமாக சார்ஜ் செய்யும் வழிமுறையினை கண்டறிந்துள்ளனர்.  

    பேட்டரியில் வேகமாக சார்ஜ் செய்ய கட்டுமான சோதனைகள் மற்றும் கணினி சிமுலேஷன்களை பயன்படுத்தி பேட்டரியின் இயக்கத்தை சோதனை செய்தனர். தொடர் ஆய்வுகளில் லித்தியம் அயன் பேட்டிரிகள் வேகமாக சார்ஜ் செய்யும் முறையை கண்டறிந்துள்ளனர். 

    பேட்டரிகளில் புதிய பொருட்களை வைத்து சோதனை செய்வதன் மூலம் பேட்டரிகளின் எடை குறைவாகவும், பாதுகாப்பு மற்றும் மின்சார வாகனங்களுக்கு பயன்படுத்தக் கூடிய வகையில் அதிசிறந்த பேட்டரிகளை கண்டறிய முடியும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
    எல்ஜி நிறுவனம் அடுத்த மாதம் அறிமுகம் செய்ய இருக்கும் G6 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் தெரியவந்துள்ளது.
    சியோல்: 

    பிப்ரவரி மாதம் நடைபெற இருக்கும் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் எல்ஜி நிறுவனம் புதிய ஸ்மார்ட்போனினை வெளியிட இருப்பதை உறுதி செய்துள்ளது. இந்நிலையில் புதிய ஸ்மார்ட்போன் குறித்த சிறப்பம்சங்களும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இவை கொரிய இணையதளம் ஒன்றில் பதிவு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.  

    அதன் படி எல்ஜி நிறுவனம் வெளியிட இருக்கும் ஸ்மார்ட்போன் G6 என அழைக்கப்படும் என்றும் இதில் 1440x2880 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே வழங்கப்படும் என கூறப்படுகிறது. இது மற்ற ஸ்மார்ட்போன்களில் வழங்கப்படுவதை விட வித்தியாசமானது ஆகும். மேலும் சாம்சங் S7 எட்ஜ் ஸ்மார்ட்போனில் வழங்கப்பட்டதை விட சற்றே அதிகமான பிக்சல் டென்சிட்டி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. 

    எல்ஜி நிறுவனம் புதிய ஸ்மார்ட்போன் அதிக சூடாவதை தவிர்க்க சிறிய பைப் ஒன்றை வழங்குகிறது. இதே போன்ற அம்சம் வழங்கப்படுவது குறித்து ஏற்கனவே கூறப்பட்டு வந்தது. இந்த அம்சம் லேப்டாப் மற்றும் கணினிகள் அதிக சூடாவதை தவிர்க்க வழங்கப்படுவதை போன்றதாகும். 

    இறுதியாக எல்ஜி நிறுவனத்தின் G6 ஸ்மார்ட்போனில் மேம்படுத்தப்பட்ட செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தும் உதவியாள் சேவை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. சாம்சங் நிறுவனமும் பிக்ஸ்பி என்ற பெயரில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை உருவாக்கி வருகிறது. 
    ×