என் மலர்

  மொபைல்ஸ்

  சியோமி 13 அல்ட்ரா வெளியீட்டு தேதி அறிவிப்பு
  X

  சியோமி 13 அல்ட்ரா வெளியீட்டு தேதி அறிவிப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஏப்ரல் மாத வாக்கில் சியோமி நிறுவனத்தின் சியோமி 13 அல்ட்ரா ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
  • சியோமி 13 அல்ட்ரா மாடலின் சர்வதேச வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

  சியோமி நிறுவனம் தனது சியோமி 13 அல்ட்ரா ஸ்மார்ட்போனினை ஏப்ரல் மாத வாக்கில் சீன சந்தையில் அறிமுகம் செய்து இருந்தது. சியோமியின் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் விரைவில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் மைக்ரோசைட் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

  இதில் சியோமி 13 அல்ட்ரா சர்வதேச வெளியீட்டு தேதி தெரியவந்துள்ளது. சர்வதேச சந்தையில் ஜூன் 8-ம் தேதி சியோமி 13 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. சியோமி 13 அல்ட்ரா மாடலை வாங்குவோருக்கு மூன்று மாதங்கள் யூடியூப் பிரீமியம் சந்தா, 6 மாதங்களுக்கு 100 ஜிபி கூகுள் ஒன் சந்தா உள்ளிட்டவை இலவசமாக வழங்கப்படுகிறது.

  சர்வதேச சந்தையில் சியோமி 13 அல்ட்ரா மாடல் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி வேரியண்டில் கிடைக்கும் என்றும் ஐரோப்பிய சந்தையில், இதன் விலை 1299 யூரோக்கள் அல்லது 1499 யூரோக்கள் வரை நிர்ணயம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  சியோமி 13 அல்ட்ரா அம்சங்கள்:

  6.73 இன்ச் 3200x1440 பிக்சல் குவாட் ஹெச்டி பிளஸ் AMOLED, HDR10+ டிஸ்ப்ளே

  2600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், டால்பி விஷன், கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு

  ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர்

  அட்ரினோ நெக்ஸ்ட் ஜென் GPU

  12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி

  16 ஜிபி ரேம், 512 ஜிபி, 1 டிபி மெமரி

  டூயல் சிம் ஸ்லாட்

  ஆண்ட்ராய்டு 13 சார்ந்த MIUI14

  50MP பிரைமரி கேமரா, 1 இன்ச் சோனி IMX989 சென்சார்

  50MP சோனி IMX858 அல்ட்ரா வைடு லென்ஸ்

  50MP சோனி IMX858 டெலிபோட்டோ கேமரா

  50MP சோனி பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா

  32MP செல்ஃபி கேமரா

  இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்

  யுஎஸ்பி டைப் சி ஆடியோ, ஹைரெஸ் ஆடியோ, டூயல் ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ்

  டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட்

  5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.3

  யுஎஸ்பி டைப் சி

  5000 எம்ஏஹெச் பேட்டரி

  90 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

  50 வாட் வயர்லெஸ் ரிவர்ஸ் சார்ஜிங்

  ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங்

  Next Story
  ×