என் மலர்
மொபைல்ஸ்

அசத்தல் அம்சங்களுடன் புதிய X90 சீரிஸ் - வெளியீட்டை உறுதிப்படுத்திய விவோ
- விவோ நிறுவனம் உருவாக்கி வரும் புதிய X90 சீரிஸ் ஸ்மார்ட்போனின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டது.
- புதிய ஸ்மார்ட்போனுடன் இயர்பட்ஸ் 3 மாடலும் அறிமுகமாகும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
விவோ நிறுவனம் விவோ X90 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை சீன சந்தையில் நவம்பர் 22 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய X90 சீரிசில் X90, X90 ப்ரோ மற்றும் X90 ப்ரோ பிளஸ் போன்ற மாடல்கள் இடம்பெற்று இருக்கும் என தெரிகிறது. விவோ X90 மற்றும் X90 மாடல்கள் மீடியாடெக் டிமென்சிட்டி 9200 பிராசஸர், X90 ப்ரோ பிளஸ் மாடலில் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
ஏற்கனவே பல்வேறு டீசர்கள் வெளியான நிலையில், X90 சீரிசில் செய்ஸ் ஆப்டிக்ஸ் மற்றும் டி கோட்டிங் கேமரா வழங்கப்படும் என தெரியவந்துள்ளது. புதிய ஸ்மார்ட்போன்களில் விவோ உருவாக்கிய வி2 சிப் வழங்கப்பட இருக்கிறது. விவோ X90 சீரிசில் BOE ஸ்கிரீன், 120 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி மற்றும் ஒரிஜின் ஒஎஸ் 3 வழங்கப்படும் என தெரிகிறது. விவோ X90 ப்ரோ மற்றும் X90 ப்ரோ பிளஸ் மாடல்களில் லெதர் போன்ற பேக் மற்றும் மெட்டல் ஸ்ட்ரிப் வழங்கப்படலாம்.
புகைப்படங்களை எடுக்க விவோ X90 ப்ரோ பிளஸ் மாடலில் 50MP பிரைமரி கேமரா, 48MP அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, 50MP போர்டிரெயிட் கேமரா, 64MP ஆம்னிவிஷன் பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா வழங்கப்படுகிறது. சமீபத்தில் தான் விவோ தனது X90 சீரிஸ் கேமரா அப்கிரேடு பற்றி அறிவித்து இருந்தது. அதில் புது ஸ்மார்ட்போனின் கேமரா சென்சார்கள் மற்றும் அதன் திறன் பற்றி விரிவான தகவல்கள் இடம்பெற்று இருந்தன.
புது ஸ்மார்ட்போன்களுடன் விவோ TWS 3 இயர்பட்ஸ் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய விவோ இயர்பட்ஸ் 48db/49db நாய்ஸ் கேன்சலேஷன் வசதி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இதுபற்றிய இதர தகவல்கள் வரும் நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.






