search icon
என் மலர்tooltip icon

    மொபைல்ஸ்

    டெக்னோவின் புது ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் - என்னென்ன அம்சங்கள் தெரியுமா?
    X

    டெக்னோவின் புது ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் - என்னென்ன அம்சங்கள் தெரியுமா?

    • டெக்னோ நிறுவனத்தின் புதிய ஃபேண்டம் X2 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 12 சார்ந்த ஒஎஸ் கொண்டிருக்கிறது.
    • டெக்னோ ஃபேண்டம் X2 மாடலில் பிரத்யேக யுனிபாடி 3.5டி லூனார் கிரேட்டர் டிசைன் வழங்கப்பட்டு இருக்கிறது.

    டெக்னோ நிறுவனம் ஃபேண்டம் X2 ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்து இருக்கிறது. இதில் 6.8 இன்ச் FHD+ 120Hz AMOLED ஸ்கிரீன், 64MP பிரைமரி கேமரா, OIS, 32MP செல்ஃபி கேமரா, 5160 எம்ஏஹெச் பேட்டரி, 45 வாட் ஃபிலாஷ் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

    புதிய டெக்னோ ஃபேண்டம் X2 ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ. 40 ஆயிரம் பட்ஜெட்டில் மீடியாடெக் டிமென்சிட்டி 9000 5ஜி சிப்செட் கொண்ட முதல் ஸ்மார்ட்போன் எனும் பெருமையை பெற்றுள்ளது. இதில் பிரத்யேக யுனிபாடி டபுள்-கர்வ்டு பில்டு மற்றும் 3.5D லூனார் கிரேட்டர் டிசைன் கொண்டிருக்கிறது.

    டெக்னோ ஃபேண்டம் X2 அம்சங்கள்:

    6.8 இன்ச் 1080x2400 பிக்சல் FHD+ AMOLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட்

    கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு

    ஆக்டா கோர் மீடியாடெக் 9000 பிராசஸர்

    மாலி G710 10-கோர் GPU

    8 ஜிபி ரேம்

    256 ஜிபி மெமரி

    ஆண்ட்ராய்டு 12 மற்றும் ஹைஒஎஸ் 12

    டூயல் சிம் ஸ்லாட்

    64MP பிரைமரி கேமரா, OIS

    13MP அல்ட்ரா வைடு கேமரா

    2MP கேமரா

    32MP செல்ஃபி கேமரா

    இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்

    யுஎஸ்பி டைப் சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்

    5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 6

    ப்ளூடூத் 5.3, யுஎஸ்பி டைப் சி

    5160 எம்ஏஹெச் பேட்டரி

    45 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    டெக்னோ ஃபேண்டம் X2 ஸ்மார்ட்போன் மூன்லைட் சில்வர் மற்றும் ஸ்டார்டஸ்ட் கிரே என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 39 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போனிற்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. விற்பனை அமேசான், சில்லறை விற்பனை மையங்களில் ஜனவரி 9 ஆம் தேதி துவங்க இருக்கிறது.

    Next Story
    ×