என் மலர்
மொபைல்ஸ்

ரெட்மி ஸ்மார்ட்போனிற்கு திடீர் விலை குறைப்பு - எவ்வளவு தெரியுமா?
- சியோமி நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ரெட்மி நோட் 12 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருக்கிறது.
- புதிய ரெட்மி நோட் 12 சீரிஸ் மாடல்களில் 200MP பிரைமரி கேமரா, சூப்பர் AMOLED டிஸ்ப்ளே போன்ற அம்சங்கள் வழங்கப்பட இருக்கிறது.
சியோமி நிறுவனம் ரெட்மி நோட் 12 சீரிஸ் இந்திய வெளியீட்டை உறுதிப்படுத்தி விட்டது. புது ரெட்மி நோட் 12 சீரிஸ் மாடல்களில் 120Hz ரிப்ரெஷ் ரேட் கொண்ட சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, 200MP பிரைமரி கேமரா வழங்கப்படுகிறது. எனினும், ரெட்மி நோட் 12 சீரிஸ் வெளியீட்டுக்கு முன் சியோமி நிறுவனம் ரெட்மி நோட் 11 ப்ரோ பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் விலையை குறைத்து இருக்கிறது. விலை குறைப்பின் படி இந்த ஸ்மார்ட்போன் விலை ரூ. 20 ஆயிரத்திற்கும் கீழ் கிடைக்கிறது.
ரெட்மி நோட் 11 ப்ரோ பிளஸ் 5ஜி இந்த சீரிசில் டாப் எண்ட மாடல் ஆகும். இந்த ஸ்மார்ட்போனின் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 20 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. தற்போது இதன் விலை ரூ. 19 ஆயிரத்து 999 என மாறி இருக்கிறது. குறைக்கப்பட்ட புது விலை சியோமி இந்தியா அதிகாரப்பூர்வ வலைதளத்தில் ஏற்கனவே மாற்றப்பட்டு விட்டது.
மேலும் ஐசிஐசிஐ வங்கி கார்டு பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு அமேசான் ரூ. 2 ஆயிரம் தள்ளுபடி வழங்குகிறது. ப்ளிப்கார்ட் தளத்தில் இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ. 19 ஆயிரத்து 790 என பட்டியலிடப்பட்டு இருக்கிறது. பேங்க் ஆஃப் பரோடா மற்றும் ஃபெடரல் வங்கி கார்டுகளுக்கு ரூ. 1000 தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதன் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல்களுக்கும் இது போன்ற தள்ளுபடி வழங்கப்படுகிறது.
அம்சங்களை பொருத்தவரை ரெட்மி நோட் 11 ப்ரோ பிளஸ் 5ஜி மாடலில் 120Hz ரிப்ரெஷ் ரேட் கொண்ட AMOLED டிஸ்ப்ளே, 108MP பிரைமரி கேமரா, 67 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங், ஸ்டீரியோ ஸ்பீக்கர், டால்பி அட்மோஸ் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.






