search icon
என் மலர்tooltip icon

    மொபைல்ஸ்

    போக்கோ பிராண்டிங் உடன் மீண்டும் ரீ-லான்ச் ஆகிறது ரெட்மி நோட் 10S ஸ்மார்ட்போன்
    X

    போக்கோ பிராண்டிங் உடன் மீண்டும் ரீ-லான்ச் ஆகிறது ரெட்மி நோட் 10S ஸ்மார்ட்போன்

    • வருகிற ஆகஸ்ட் மாதம் இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    • புரோ வெர்ஷனுடன் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாக உள்ளதாக கூறப்படுகிறது.

    சியோமி நிறுவனம் அதன் ரெட்மி நோட் 10S மாடலை கடந்த 2021ம் ஆண்டின் முதல் பாதியில் அறிமுகப்படுத்தியது. ரெட்மி நோட் 10 மற்றும் நோட் 10 புரோ ஆகிய மாடல்களுக்கு இடையே இந்த நோட் 10S ஸ்மார்ட்போன் வெளியிடப்பட்டது. அந்த போன் வெளியாகி ஓராண்டு ஆகும் நிலையில் தற்போது அதனை போக்கோ பிராண்ட் மூலம் மறு வெளியீடு செய்யப்பட்ட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்த ஸ்மார்ட்போன் வருகிற ஆகஸ்ட் மாதம் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இது புரோ வெர்ஷனுடன் அறிமுகமாக உள்ளதாம். இந்த ஸ்மார்ட்போனில் உள்ள அம்சங்கள் என்னென்ன என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை. இருப்பினும் இதன் நார்மல் வெர்ஷன் மாடலான நோட் 10S-ல் உள்ள அம்சங்களை கொண்டிருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.


    ரெட்மி நோட் 10S மாடல் ஆனது 6.43-இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹிலியோ G96 SoC, 64MP (அகலம்) + 8MP (அல்ட்ரா-வைட்) + 2MP (மேக்ரோ) + 2MP (ஆழம்) என பின்புறத்தில் 4 கேமராக்களை கொண்டுள்ளது. இதுதவிர 13 MP செல்ஃபி கேமராவும் உள்ளது.

    இது டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், 3.5 மிமீ ஹெட்ஃபோன் ஜாக், பிரத்யேக மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட், பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார், IP53 மதிப்பீடு, 5,000mAh பேட்டரி மற்றும் 33W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு ஆகியவற்றுடன் வருகிறது.

    Next Story
    ×