search icon
என் மலர்tooltip icon

    மொபைல்ஸ்

    பட்ஜெட் விலையில் ரெட்மி 11 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம்
    X

    பட்ஜெட் விலையில் ரெட்மி 11 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம்

    • சியோமி நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் புதிய ரெட்மி 11 பிரைம் சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது.
    • புதிய ரெட்மி 11 பிரைம் மற்றும் ரெட்மி 11 பிரைம் 5ஜி மாடல்களின் விலை பட்ஜெட் பிரிவில் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    சியோமி நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் ரெட்மி 11 பிரைம் மற்றும் ரெட்மி 11 பிரைம் 5ஜி ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்தது. இரு ஸ்மார்ட்போன்களுடன் ரெட்மி A1 ஸ்மார்ட்போனும் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. சியோமி நிறுவனத்தின் தீபாவளி சிறப்பு விற்பனையை குறி வைத்து புது ஸ்மார்ட்போன் மாடல்கள் அறிமுகமாகி இருக்கின்றன.

    ரெட்மி 11 பிரைம் மற்றும் ரெட்மி 11 பிரைம் 5ஜி மாடல்கள் பெயருக்கு ஏற்றார்போல் 4ஜி மற்றும் 5ஜி கனெக்டிவிட்டியுடன் கிடைக்கின்றன. ரெட்மி 11 பிரைம் மாடலின் அம்சங்கள் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட போக்கோ M5 மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டு இருக்கிறது. எனினும், இரு மாடல்களும் தோற்றத்தில் வித்தியாசமாக காட்சியளிக்கின்றன. ரெட்மி 11 பிரைம் 5ஜி மாடல் சீன சந்தையில் கிடைக்கும் ரெட்மி நோட் 11E ஸ்மார்ட்போனின் ரிபிராண்டு செய்யப்பட்ட வெர்ஷன் ஆகும்.


    சிறப்பம்சங்களை பொருத்தவரை இரு மாடல்களிலும் 6.58 இன்ச் 2408x1080 பிக்சல் LCD ஸ்கிரீன், 90Hz ரிப்ரெஷ் ரேட், டியு-டிராப் நாட்ச், ஆண்ட்ராய்டு 12 சார்ந்த MIUI 13 வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 50MP பிரைமரி கேமரா, 2MP டெப்த் சென்சார், 5MP செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் 4ஜி மாடலில் மட்டும் 2MP மேக்ரோ லென்ஸ் கூடுதலாக வழங்கப்பட்டு இருக்கிறது.

    ரெட்மி 11 பிரைம் மாடலில் மீடியாடெக் ஹீலியோ ஜி99 பிராசஸர், ப்ளூடூத் 5.3 வழங்கப்பட்டு இருக்கிறது. ரெட்மி 11 பிரைம் 5ஜி மாடலில் மீடியாடெக் டிமென்சிட்டி 7000 பிராசஸர், ப்ளூடூத் 5.1 வழங்கப்பட்டு உள்ளது. இரு மாடல்களிலும் LPDDR4x ரேம், UFS2.2 மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் பக்கவாட்டில் கைரேகை சென்சார், 3.5 எம்எம் ஹெட்போன் ஜாக், 5000 எம்ஏஹெச் பேட்டரி, 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டுள்ளது.

    விலை விவரங்கள்:

    ரெட்மி 11 பிரைம் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடல் ரூ. 12 ஆயிரத்து 999

    ரெட்மி 11 பிரைம் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் ரூ. 14 ஆயிரத்து 999

    ரெட்மி 11 பிரைம் 5ஜி 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடல் ரூ. 13 ஆயிரத்து 999

    ரெட்மி 11 பிரைம் 5ஜி 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் ரூ. 15 ஆயிரத்து 999

    புதிய ரெட்மி 11 பிரைம் ஸ்மார்ட்போன் தண்டர் பிளாக், க்ரோம் சில்வர் மற்றும் மீடோ கிரீன் நிறங்களில் கிடைக்கிறது. ரெட்மி 11 பிரைம் 5ஜி மாடல் பெப்பி பர்பில், பிலாஷி பிளாக் மற்றும் பிளேஃபுல் கிரீன் நிறங்களில் கிடைக்கிறது. ரெட்மி 11 பிரைம் 5ஜி மாடல் விற்பனை செப்டம்பர் 9 ஆம் தேதி அமேசான் தளத்தில் துவங்குகிறது. ரெட்மி 11 பிரைம் விற்பனை பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

    Next Story
    ×