என் மலர்

  மொபைல்ஸ்

  ஜூன் 8-இல் இந்தியா வரும் ரியல்மி 11 ப்ரோ சீரிஸ்
  X

  ஜூன் 8-இல் இந்தியா வரும் ரியல்மி 11 ப்ரோ சீரிஸ்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ரியல்மி நிறுவனம் சிறப்பு பரிசுகளை வழங்கும் போட்டிகளை தனது வலைதளத்தில் நடத்தி வருகிறது.
  • இந்த ஸ்மார்ட்போன்கள் கடந்த மாதமே சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டன.

  ரியல்மி நிறுவனம் பல்வேறு டீசர்களை தொடர்ந்து தனது ரியல்மி 11 ப்ரோ சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் இந்திய வெளியீட்டு தேதியை அறிவித்து இருக்கிறது. ரியல்மி 11 ப்ரோ மற்றும் ரியல்மி 11 ப்ரோ பிளஸ் 5ஜி என இரண்டு புதிய ஸ்மார்ட்போன்கள் ஜூன் 8-ம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

  வெளியீட்டு தேதி அடங்கிய போஸ்டரில், ரியல்மி நிறுவனத்தின் புதிய விளம்பர தூதர் ஷாருக் கான் இடம்பெற்று இருக்கிறார். புகைப்படங்களை எடுக்க இந்த ஸ்மார்ட்போனில் 200MP சாம்சங் நிறுவனத்தின் ISOCELL HP3 பிரைமரி கேமரா வழங்கப்படுகிறது. இத்துடன் சூப்பர்ஜூம் கேமரா, 4x லாஸ்லெஸ் ஜூம் மோட், சூப்பர் க்ரூப் போர்டிரெயிட் மற்றும் ஒன் டேக் போன்ற கேமரா அம்சங்கள் வழங்கப்படுகிறது.

  முன்னாள் GUCCI ப்ரிண்ட்ஸ் டிசைனர் மேடியோ மெனோட்டோ மற்றும் ரியல்மி டிசைன் ஸ்டூடியோ உடன் ரியல்மி கூட்டணி அமைத்து புதிய ஸ்மார்ட்போனின் டிசைனை உருவாக்கி இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன்கள் கடந்த மாதமே சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டன. அதன்படி இதன் அம்சங்கள் ஏற்கனவே அம்பலமாகி இருக்கின்றன.

  புதிய ஸ்மார்ட்போன் வெளியீட்டை அடுத்து, ரியல்மி நிறுவனம் சிறப்பு பரிசுகளை வழங்கும் போட்டிகளை தனது வலைதளத்தில் நடத்தி வருகிறது. அதன்படி ரியல்மி பயனர்கள் அந்நிறுவன வலைதளத்தில் Notify Me பட்டனை க்ளிக் செய்து ரூ. 100 மதிப்புள்ள, 10 ஆயிரம் ரியல்மி காயின்களை பெற்றுக்கொள்ள முடியும். இத்துடன் ரூ. 1000 மதிப்புள்ள ஆறு மாதங்கள் நீட்டிக்கப்பட்ட வாரண்டி, தேர்வு செய்யப்பட்ட அக்சஸரீக்களுக்கு 50 சதவீதம் தள்ளுபடி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

  இந்தியாவில் ரியல்மி 11 ப்ரோ சீரிஸ் வெளியீட்டு நிகழ்வு ஜூன் 8-ம் தேதி மதியம் 12 மணிக்கு துவங்குகிறது. இந்த நிகழ்வு புது டெல்லியின் இந்திரா காந்தி ஸ்டேடியம் வளாகத்தில் நடைபெறுகிறது. அறிமுக நிகழ்வு ரியல்மி அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களைில் நேரலை செய்யப்படும் என்று எதிர்பார்க்கலாம்.

  Next Story
  ×