search icon
என் மலர்tooltip icon

    மொபைல்ஸ்

    இணையத்தில் லீக் ஆன போக்கோ 5ஜி போன் விவரங்கள்!
    X

    இணையத்தில் லீக் ஆன போக்கோ 5ஜி போன் விவரங்கள்!

    • போக்கோ நிறுவனத்தின் புது 5ஜி போன் விரைவில் வெளியாக இருக்கிறது.
    • இந்த ஸ்மார்ட்போனின் விலை விவரங்கள் லீக் ஆகி உள்ளது.

    போக்கோ நிறுவனம் விரைவில் புதிய போக்கோ F4 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய இருக்கிறது. புது போக்கோ போன் இந்தியா மட்டுமின்றி சர்வதேச சந்தையிலும் அறிமுகமாக இருக்கிறது. போக்கோ F4 5ஜி வெளியீட்டு தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை. இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி இதன் வெளியீடு இம்மாத இறுதியில் நடைபெறும் என கூறப்படுகிறது.

    அம்சங்களை பொருத்தவரை போக்கோ F4 5ஜி ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 சிபிசெட் வழங்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. இந்த ஸ்மார்ட்போன் மாடலின் சிறப்பம்சங்கள் பற்றிய விவரங்கள் ஒவ்வொன்றாக அறிவிக்கப்பட இருக்கும் நிலையில், இதன் விலை விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளது.


    அதன் படி போக்கோ F4 5ஜி ஸ்மார்ட்போன் 12GB LPDDR5 ரேம், 256GB UFS3.1 மெமரி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இத்துடன் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி வழங்கப்படலாம். இந்த பிரிவில் கிடைக்கும் அதிவேக ஸ்மார்ட்போன் மாடலாக போக்கோ F4 5ஜி இருக்கும் என தெரிகிறது. சர்வதேச சந்தையில் போக்கோ F4 ஒற்றை வேரியண்டில் அறிமுகமாக இருக்கிறது.

    அதன்படி போக்கோ F4 5ஜி மாடல் விலை 459 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 35 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யப்படலாம். இந்திய சந்தையில் புதிய போக்கோ F4 5ஜி மாடலின் விலை வங்கி சலுகைகளை சேர்த்து ரூ. 26 ஆயிரத்து 999 விலையில் விற்பனை செய்யப்படும் என கூறப்படுகிறது.

    Next Story
    ×