என் மலர்
மொபைல்ஸ்

நவம்பரில் இந்தியா வரும் வேற லெவல் ஸ்மார்ட்போன் - லீக் ஆன முக்கிய தகவல்..!
- அடுத்த மாதம் இந்தியாவில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ள ஒரே ஸ்மார்ட்போன் ஃபைண்ட் X9 சீரிஸ் மட்டுமல்ல.
- ஃபைண்ட் X9 மற்றும் X9 ப்ரோ ஆகியவை டிமென்சிட்டி 9500 பிராசஸரால் இயக்கப்படுகின்றன.
ஒப்போ நிறுவனம் வருகிற 16 ஆம் தேதி சீன சந்தையில் தனது ஒப்போ ஃபைண்ட் X9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிவிக்க இருக்கிறது. புதிய ஃபைண்ட் X9 மற்றும் X9 ப்ரோ தவிர, ஒப்போ பேட் 5 டேப்லெட் மற்றும் ஒப்போ வாட்ச் எஸ் ஸ்மார்ட்வாட்ச் உள்ளிட்ட சாதனங்களையும் ஒப்போ நிறுவனம் இதே நிகழ்வில் வெளியிட உள்ளது.
இந்த நிலையில், ஒப்போ நிறுவனம் இந்திய சந்தையில் தனி வெளியீட்டு நிகழ்வை நடத்தக்கூடும் என்றும் கூறப்படுகிறது. இது குறித்து வெளியாகி இருக்கும் தகவல்களில், இந்தியாவில் நடைபெற்ற இந்திய மொபைல் காங்கிரஸில் இந்தியா வெளியீட்டு காலக்கெடுவை நிறுவனம் ஏற்கனவே உறுதிப்படுத்தியுள்ளது.
ஒப்போ ஃபைண்ட் X9 வெளியீடு
இந்திய சந்தையில் டிமென்சிட்டி 9500 சிப்செட் மூலம் இயங்கும் முதல் ஸ்மார்ட்போன்களாக ஒப்போ ஃபைண்ட் X9 மற்றும் ஃபைண்ட் X9 ப்ரோ ஆகிய மாடல்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. வெளியீட்டைப் பொறுத்தவரை, இந்த மாடல்கள் நவம்பரில் நடைபெறும்.
அடுத்த மாதம் இந்தியாவில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ள ஒரே ஸ்மார்ட்போன் ஃபைண்ட் X9 சீரிஸ் மட்டுமல்ல. சமீபத்திய தகவல்களில் ரியல்மி நிறுவனம் தனது GT 8 ப்ரோ ஸ்மார்ட்போனினை நவம்பர் 11 ஆம் தேதி வெளியிடலாம் என்றும், ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன் வருகிற நவம்பர் 13 ஆம் தேதி வெளியிடப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
ஃபைண்ட் X9 மற்றும் X9 ப்ரோ ஆகியவை டிமென்சிட்டி 9500 பிராசஸரால் இயக்கப்படுகின்றன. இரு மாடல்களும் அசத்தலான புகைப்படம் எடுக்கும் திறன் கொண்டிருக்கும் என்று தெரிகிறது.






