search icon
என் மலர்tooltip icon

    மொபைல்ஸ்

    108MP கேமராவுடன் உருவாகும் புது ஒப்போ ஸ்மார்ட்போன்
    X

    108MP கேமராவுடன் உருவாகும் புது ஒப்போ ஸ்மார்ட்போன்

    • ஒப்போ நிறுவனம் உருவாக்கி வரும் புதிய ஸ்மார்ட்போன் மாடல் விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.
    • இந்த ஸ்மார்ட்போன் A சீரிஸ் பிராண்டிங் மற்றும் 67 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது.

    ஒப்போ நிறுவனம் தனது ஹை-எண்ட் A சீரிசில் அறிமுகம் செய்ய புது ஸ்மார்ட்போனை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 108MP பிரைமரி கேமரா, 67 வாட் பாஸ்ட் சார்ஜிங், அதிக ஸ்கிரீன்-டு-பாடி ரேஷியோ போன்ற அம்சங்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

    உண்மையில் இந்த ஸ்மார்ட்போன் எந்த பெயரில் விற்பனைக்கு வரும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. எனினும், ஒப்போ A சீரிஸ் மாடல்கள் எண்ட்ரி-லெவல் அல்லது பட்ஜெட் பிரிவிலேயே அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. இந்த மாதத்தில் மட்டும் ஒப்போ நிறுவனம் மூன்று A சீரிஸ் ஸ்மார்ட்போகளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது.

    டிப்ஸ்டரான டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் வெய்போவில் வெளியிட்டு இருக்கும் தகவல்களில், ஒப்போ நிறுவனம் புதிய A சீரிஸ் ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருவதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் உயர்-ரக அம்சங்களை கொண்டிருக்கும் என்றும் இதுவரை வெளியான A சீரிஸ் மாடல்களில் இல்லாத அளவுக்கு அதிக ஸ்கிரீன் டு பாடி ரேஷியோ வழங்கப்படும் என கூறப்படுகிறது.

    புதிய ஒப்போ ஸ்மார்ட்போன் வளைந்த டிஸ்ப்ளே, 2160Hz பல்ஸ்-விட்த் மாட்யுலேஷன் டிம்மிங் வசதி கொண்டிருக்கிறது. இது ஸ்கிரீன் ஃப்ளிக்கர் ஆகாமல் பார்த்துக் கொள்வதோடு சீரான டிஸ்ப்ளே அனுபவத்தை வழங்குகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் பன்ச் ஹோல் ரக டிஸ்ப்ளே, 108MP பிரைமரி கேமரா வழங்கப்படுகிறது. இத்துடன் 67 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டுள்ளது.

    Next Story
    ×