search icon
என் மலர்tooltip icon

    மொபைல்ஸ்

    16 ஜி.பி. ரேமுடன் உருவாகும் ஒன்பிஸ் ஓபன்?
    X

    16 ஜி.பி. ரேமுடன் உருவாகும் ஒன்பிஸ் ஓபன்?

    • புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனில் செயலிகள் பிரீ-இன்ஸ்டால் செய்யப்படுகிறது.
    • இதன் ரேம் மற்றும் ஸ்டோரேஜ் விவரங்களை டிப்ஸ்டர் வெளியிட்டுள்ளார்.

    ஒன்பிளஸ் நிறுவனத்தின் முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் ஒன்பிளஸ் ஓபன் எனும் பெயரில் நாளை (அக்டோபர் 19) நடைபெற இருக்கும் நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் ஹார்டுவேர் அம்சங்கள் கிட்டத்தட்ட ஒப்போ ஃபைண்ட் N3 மாடலில் இருப்பதை போன்றே வழங்கப்படும் என்று தெரிகிறது. இந்த ஸ்மார்ட்போனும் அக்டோபர் 19-ம் தேதியே அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

    புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனில் செயலிகள் பிரீ-இன்ஸ்டால் செய்யப்பட்டு இருக்கும் என்றும் ஒன்பிளஸ் நிறுவனம் ஏற்கனவே அறிவித்து இருந்தது. இந்த நிலையில், இந்த மடிக்கக்கூடிய சாதனத்தின் ரேம் மற்றும் ஸ்டோரேஜ் விவரங்களை டிப்ஸ்டர் ஒருவர் வெளியிட்டு இருக்கிறார். அதன்படி டிப்ஸ்டர் முகுல் ஷர்மா வெளியிட்டுள்ள தகவல்களின் படி ஒன்பிளஸ் ஓபன் மாடலில் 16 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக வெளியான தகவல்களில் ஒன்பிளஸ் ஓபன் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனில் அதிகபட்சம் 1 டி.பி. வரையிலான ஸ்டோரேஜ் வழங்கப்படும் என்று கூறப்பட்டது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் கிரீன் நிறத்தில் கிடைக்கும் என்றும் இது எமரால்டு டஸ்க் என்று அழைக்கப்படும் என்று கூறப்படுகிறது.

    எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:

    ஒன்பிளஸ் ஓபன் மாடலில் 7.8 இன்ச் மடிக்கக்கூடிய OLED டிஸ்ப்ளே, 6.31 இன்ச் வெளிப்புற OLED டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர், 16 ஜி.பி. வரையிலான ரேம், 256 ஜி.பி. மெமரி வழங்கப்படுகிறது. புகைப்படங்களை எடுக்க 48MP பிரைமரி கேமரா, 48MP அல்ட்ரா வைடு கேமரா, 64MP டெலிஃபோட்டோ கேமரா, ஹேசில்பிலாட் பிராண்டிங் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

    இதன் முன்புறத்தில் 32MP மற்றும் 20MP செல்ஃபி கேமரா சென்சார்கள் வழங்கப்படும் என்று தெரிகிறது. இத்துடன் ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ஆக்சிஜன் ஓ.எஸ். 13.1 வழங்கப்படுகிறது. ஒன்பிளஸ் ஓபன் மாடல் 4805 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் என்றும் 100 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

    இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ஒன்பிளஸ் ஓபன் மாடல் அக்டோபர் 19-ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது. இதன் விலை 1699 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 1 லட்சத்து 41 ஆயிரத்து 405 வரை நிர்ணயம் செய்யப்படலாம். இது சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி Z ஃபோல்டு 5 மாடலை விட சற்றே குறைந்த விலையில் கிடைக்கும் என்று தெரிகிறது.

    Next Story
    ×