search icon
என் மலர்tooltip icon

    மொபைல்ஸ்

    ஐகூ நிறுவனத்தின் புது பிளாக்‌ஷிப் போன் இந்தியாவில் அறிமுகம் - விலை எவ்வளவு தெரியுமா?
    X

    ஐகூ நிறுவனத்தின் புது பிளாக்‌ஷிப் போன் இந்தியாவில் அறிமுகம் - விலை எவ்வளவு தெரியுமா?

    • ஐகூ நிறுவனம் இந்திய சந்தையில் புதிய 9 சீரிஸ் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்து இருக்கிறது.
    • இந்த ஸ்மார்ட்போனிற்கு மூன்று ஆண்டுகள் ஆண்ட்ராய்டு அப்டேட் வழங்கப்பட இருக்கிறது.

    ஐகூ நிறுவனம் இந்திய சந்தையில் ஐகூ 9T ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய ஸ்மார்ட்போனில் 6.78 இன்ச் FHD+ E5 AMOLED பிளாட் ஸ்கிரீன், 120Hz ரிப்ரெஷ் ரேட், அதிகபட்சமாக 1500 நிட்ஸ் பிரைட்னஸ் வழங்கப்படுகிறது. இத்துடன் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர், ஆண்ட்ராய்டு 12 மற்றும் ஃபன்டச் ஓ.எஸ். வழங்கப்பட்டு இருக்கிறது.

    புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 13MP அல்ட்ரா வைடு கேமரா, 12MP போர்டிரெயிட் கேமரா, 16MP செல்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இதில் கேமிங் மற்றும் ரியல்-டைம் எக்ஸ்டிரீம் நைட் விஷன் வசதிக்காக வி1 பிளஸ் சிப் வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய ஐகூ 9T ஸ்மார்ட்போன் 4700 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 120 வாட் அல்ட்ரா பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.


    ஐகூ 9T அம்சங்கள்:

    - 6.78 இன்ச் 2400x1080 பிக்சல் FHD+ AMOLED 19.8:9 ஸ்கிரீன், 120Hz ரிப்ரெஷ் ரேட்

    - 3.2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர்

    - அட்ரினோ நெக்ஸ்ட்-ஜென் GPU

    - 8 ஜிபி LPDDR5 6400Mbps ரேம், 128 ஜிபி (UFS 3.1) மெமரி

    - 12 ஜிபி LPDDR5 6400Mbps ரேம், 256 ஜிபி (UFS 3.1) மெமரி

    - ஆண்ட்ராய்டு 12 மற்றும் பன்டச் ஓ.எஸ். 23

    - டூயல் சிம் ஸ்லாட்

    - 50MP பிரைமரி கேமரா, f/1.75, OIS, எல்இடி பிளாஷ்

    - 13MP 120° அல்ட்ரா வைடு சென்சார், f/2.2

    - 12MP போர்டிரெயிட் கேமரா, f/1.98

    - 16MP செல்பி கேமரா, f/2.45

    - இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்

    - யுஎஸ்பி டைப் சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், ஹைபை ஆடியோ

    - ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் (IP52)

    - 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.2

    - யுஎஸ்பி டைப் சி

    - 4700 எம்ஏஹெச் பேட்டரி

    - 120 வாட் அல்ட்ரா பாஸ்ட் பிளாஷ் சார்ஜிங்

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    ஐகூ 9T ஸ்மார்ட்போன் ஆல்பா மற்றும் லெஜண்ட் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 49 ஆயிரத்து 999 என்றும் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 54 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை ஐகூ மற்றும் அமேசான் வலைதளங்களில் நடைபெறுகிறது.

    Next Story
    ×