என் மலர்tooltip icon

    மொபைல்ஸ்

    பட்ஜெட் பிரிவில் பட்டையை கிளப்பும் அம்சங்கள்... புது ஸ்மார்ட்போன் அறிமுகம்
    X

    பட்ஜெட் பிரிவில் பட்டையை கிளப்பும் அம்சங்கள்... புது ஸ்மார்ட்போன் அறிமுகம்

    • இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 15 சார்ந்த HiOS 15 உடன் வருகிறது.
    • 18W பாஸ்ட் சார்ஜிங் மற்றும் 10W ரிவர்ஸ் வயர்டு சார்ஜிங் வசதியும் உள்ளது.

    பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன்களில் அதிநவீன உயர்தர அம்சங்கள் வழங்கப்படுவது மிகவும் குறைவு தான். திரை பெரியதாக இருந்தால், ரிப்ரெஷ் ரேட்டில் சமரசம் இருக்கும். பேட்டரி பெரியதாக இருந்தால், சார்ஜிங் வேகம் குறைவாக இருக்கும். இருப்பினும், இன்ஃபினிக்ஸ் நிறுவனத்தின் சமீபத்திய என்ட்ரி லெவல் ஸ்மார்ட்போன் கொஞ்சம் வித்தியாசமாக உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    புதிய இன்ஃபினிக்ஸ் ஹாட் 60i 5G அதிக ரிப்ரெஷ் ரேட் கொண்ட பெரிய திரையைக் கொண்டுள்ளது மட்டுமல்லாமல், மிகப்பெரிய பேட்டரி மற்றும் அதிவேக சார்ஜிங் வசதியை கொண்டுள்ளது. இத்துடன் இந்த ஸ்மார்ட்போன் அருமையான AI அம்சங்களுடன் வருகிறது.

    இன்ஃபினிக்ஸ் ஹாட் 60i 5G அம்சங்கள்:

    புதிய இன்ஃபினிக்ஸ் ஹாட் 60i 5G ஒரு விசித்திரமான வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 6.75-இன்ச் HD+ டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இது 120Hz ரிப்ரெஷ் ரேட் கொண்டுள்ளது. இது கேமிங் மற்றும் ஸ்க்ரோலிங்கில் மென்மையான அனுபவத்தை வழங்குகிறது.

    இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் டிமென்சிட்டி 6400 சிப் கொண்டுள்ளது. இது 4 ஜிபி LPDDR4X ரேம் மற்றும் 4 ஜிபி விர்ச்சுவல் ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இவை மல்டி-டாஸ்கிங் செய்யும் போது சீரான அனுபவத்தை வழங்குகிறது. இதன் சிறப்பம்சங்களில் ஒன்று 6,000mAh பேட்டரி ஆகும், இது ஒரு முழு நாள் பயன்பாட்டை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் 18W பாஸ்ட் சார்ஜிங் மற்றும் 10W ரிவர்ஸ் வயர்டு சார்ஜிங் வசதியும் உள்ளது.

    இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 15 சார்ந்த HiOS 15 உடன் வருகிறது. கேமராவை பொருத்தவரை 2K வீடியோ பதிவு செய்யும் திறன் கொண்ட 50 MP பிரைமரி கேமரா, முன்பக்கத்தில் 5 MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் IP64 தர வாட்டர் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ஸ் வசதி கொண்டுள்ளது. பாதுகாப்பிற்காக பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 3.5mm ஹெட்போன் ஜாக் கொண்டுள்ளது.

    விலையைப் பொறுத்தவரை, இன்ஃபினிக்ஸ் ஹாட் 60i 5G 4 ஜிபி + 128 ஜிபி மாடலின் விலை ரூ.9,299 ஆகும். இருப்பினும், வாங்குபவர்கள் ப்ரீ-பெய்டு கார்டு சலுகைகளுடன் முதல் விற்பனையில் ரூ.8,999க்கு அதைப் பெறலாம்.

    Next Story
    ×