search icon
என் மலர்tooltip icon

    மொபைல்ஸ்

    கூகுள் பிக்சல் 6a ஸ்மார்ட்போனின் கைரேகை ஸ்கேனரில் இப்படி ஒரு பாதுகாப்பு குறைபாடா?
    X

    கூகுள் பிக்சல் 6a ஸ்மார்ட்போனின் கைரேகை ஸ்கேனரில் இப்படி ஒரு பாதுகாப்பு குறைபாடா?

    • கூகுள் பிக்சல் 6a ஸ்மார்ட்போனின் விலை ரூ.43 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
    • இந்த ஸ்மார்ட்போன் வருகிற ஜூலை 28-ந் தேதி முதல் விற்பனைக்கு வர உள்ளது.

    கூகுள் நிறுவனம் அதன் பிக்சல் 6a ஸ்மார்ட்போனை கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்தியாவில் அறிமுகம் செய்தது. இதன் விலை ரூ.43 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. இந்த ஸ்மார்ட்போன் வருகிற ஜூலை 28-ந் தேதி முதல் விற்பனைக்கு வர உள்ளது. இந்நிலையில், இதன் இன்-டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனரில் கோளாறு இருப்பதாக புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளது.

    விற்பனைக்கு வரும் முன் ரிவ்யூ செய்பவர்களுக்காக முன்கூட்டியே பிரத்யேகமாக இந்த போன் வழங்கப்பட்டு இருந்தது. அவ்வாறு ரிவ்யூ செய்தவர்கள் ஏராளமானோர் அதன் இன்-டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனரில் கோளாறு இருப்பதாக தெரிவித்துள்ளனர்.


    பொதுவாக இன்-டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனரில் குறிப்பிட்ட விரல்களில் உள்ள கைரேகை பதிவு செய்யப்பட்ட பின், அந்த விரலை பயன்படுத்தினால் மட்டுமே அந்த போனின் டிஸ்ப்ளே லாக் ஓபன் ஆகும். ஆனால் கூகுளின் இந்த ஸ்மார்ட்போனில் பதிவு செய்யப்படாத விரலின் மூலமும் திறக்க முடிவதாக ரிவ்யூ செய்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

    இது சாஃப்ட்வேரில் உள்ள பிரச்சனையா அல்லது ஹார்ட்வேரில் உள்ள பிரச்சனையா என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை என ரிவ்யூவர்கள் தெரிவித்துள்ளனர். கூகுள் நிறுவனமும் இதுகுறித்து எந்தவித விளக்கமும் அளிக்காமல் உள்ளது. இந்த பிரச்சனையை சரி செய்யாவிட்டால் அது இந்த போனின் விற்பனையை பெரிதும் பாதிக்கக்கூடும். ஆதலால் விரைவில் கூகுள் நிறுவனம் இதற்கு தீர்வு கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×