என் மலர்

  கணினி

  இந்தியாவில் பட்ஸ் ப்ரோ விலையை திடீரென குறைத்த ஒன்பிளஸ்
  X

  இந்தியாவில் பட்ஸ் ப்ரோ விலையை திடீரென குறைத்த ஒன்பிளஸ்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஒன்பிளஸ் நிறுவனத்தின் கிளவுட் 11 நிகழ்வில் புது ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போனுடன் பல்வேறு சாதனங்கள் அறிமுகமாகின்றன.
  • புது சாதனங்கள் அறிமுகமாக இருக்கும் நிலையில், ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ இயர்போனின் விலை குறைக்கப்பட்டது.

  ஒன்பிளஸ் நிறுவனம் பிப்ரவரி 7 ஆம் தேதி கிளவுட் 11 நிகழ்வில் புதிய ஒன்பிளஸ் 11, ஒன்பிளஸ் 11R, ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 2, ஒன்பிளஸ் டிவி, ஒன்பிளஸ் பேட் போன்ற சாதனங்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. இவற்றில் ஒன்பிளஸ் 11 மற்றும் ஒன்பிளஸ் பட்ஸ் 2 மாடல்கள் ஏற்கனவே சீன சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்தியாவில் ஒன்பிளஸ் பட்ஸ் 2 விலை ரூ. 10 ஆயிரத்து 990 என நிர்ணயம் செய்யப்படலாம்.

  புது இயர்பட்ஸ் அறிமுகமாக இருக்கும் நிலையில், ஒன்பிளஸ் நிறுவனம் தனது ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ விலையை இந்திய சந்தையில் குறைத்து இருக்கிறது. இந்தியாவில் ரூ. 9 ஆயிரத்து 990 விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்த ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ தற்போது ரூ. 1000 விலை குறைக்கப்பட்டு ரூ. 8 ஆயிரத்து 990 விலையில் விற்பனைக்கு கிடைக்கிறது.

  இந்த விலை குறைப்பு ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ ரேடியண்ட் சில்வர், மேட் பிளாக் மற்றும் கிலாசி வைட் என மூன்று நிற வேரியண்ட்களுக்கும் பொருந்தும்.விலை குறைப்பு மட்டுமின்றி ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ வாங்கும் ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டு கொண்டு பணம் செலுத்தும் போது ரூ. 1000 உடனடி தள்ளுபிட பெறலாம். இதே போன்று மொபிகுயிக் வாலெட் பயன்படுத்தும் போது ரூ. 500 கேஷ்பேக் வழங்கப்படுகிறது.

  அம்சங்களை பொருத்தவரை ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ மாடலில் 11mm டிரைவர்கள், ப்ளூடூத் 5.2 கனெக்டிவிட்டி, மூன்று மைக்ரோபோன்கள் கொண்ட ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி, 37 எம்ஏஹெச் பேட்டரி, IP55 தர ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் வசதி, ஏழு மணி நேரத்திற்கான பேட்டரி பேக்கப் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. இதனுடன் வரும் கேஸ்-இல் 520 எம்ஏஹெச் பேட்டரி, யுஎஸ்பி டைப் சி கேபில் சார்ஜிங் வசதி, Qi வயர்லெஸ் சார்ஜிங் வசதிகள் உள்ளன.

  Next Story
  ×