search icon
என் மலர்tooltip icon

    கணினி

    ஸ்பேஷியல் ஆடியோ வசதியுடன் இந்தியாவில் அறிமுகமான ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 2 சீரிஸ்
    X

    ஸ்பேஷியல் ஆடியோ வசதியுடன் இந்தியாவில் அறிமுகமான ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 2 சீரிஸ்

    • ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனுடன் ஒன்பிளஸ் ப்ட்ஸ் ப்ரோ 2 சீரிஸ் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
    • புது பட்ஸ் ப்ரோ 2 மாடலில் 48db ANC மற்றும் ஸ்பேஷியல் ஆடியோ போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.

    ஒன்பிளஸ் 11 ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனுடன் ஒன்பிளஸ் நிறுவனம் ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 2 சீரிஸ் இயர்பட்ஸ்-ஐ இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. இது ஒன்பிளஸ் நிறுவனத்தின் இரண்டாம் தலைமுறை பிரீமியம் இயர்பட்ஸ் மாடல் ஆகும். ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 2 டாப் எண்ட் மாடலாகவும், பட்ஸ் ப்ரோ 2R சற்றே குறைந்த விலையிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

    அம்சங்களை பொருத்தவரை புதிய ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 2 மாடலில் 48db டெப்த் மற்றும் 4000Hz விட்த் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இத்துடன் 54ms லோ லேடன்சி, மெலோடிபூஸ்ட் டூயல் டிரைவர்கள் 11mm வூஃபர், 6mm டுவீட்டர், டைனாடியோ, டால்பி அட்மோஸ் மற்றும் ஸ்பேஷியல் ஆடியோ என ஏராளமான அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

    இதில் உள்ள வூஃபரின் டோம் பகுதியில் க்ரிஸ்டல் பாலிமர் டைஃப்ரம் மற்றும் டோம், எட்ஜ் டிசைன் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. இவை வெவ்வேறு ஃபிரீக்வன்சிக்களில் இணைப்பை மேம்படுத்தும் திறன் கொண்டுள்ளது.

    ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 2 மற்றும் பட்ஸ் ப்ரோ 2R அம்சங்கள்:

    ப்ளூடூத் 5.3 (LHDC 5.0/AAC/SBC/LC3)

    டால்பி அட்மோஸ் ஸ்பேஷியல் ஆடியோ (ஒன்பிளஸ் 11 மற்றும் ஒன்பிளஸ் 11R)

    ஒன்பிளஸ் ஆடியோ ID 2.0 தனித்துவம் மிக்க ஆடியோ

    11mm டைனமிக் டிரைவர் + 6mm டைஃப்ரம் டிரைவர்

    பிரெஷர் சென்சிடிவ் கண்ட்ரோல்

    டூயல் மைக்ரோபோன்

    54ms லோ-லேடன்சி கேமிங்

    இயர்போனுக்கு வாட்டர் ரெசிஸ்டண்ட் (IP55), கேஸ்-க்கு IPX4 ரெசிஸ்டண்ட்

    டூயல் கனெக்ஷன்

    இயர்பட்களில் 60 எம்ஏஹெச் பேட்டரி

    கேசில் 520 எம்ஏஹெச் பேட்டரி

    ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி

    Qi வயர்லெஸ் சார்ஜிங் (ப்ரோ 2 மாடலில் மட்டும்)

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 2 அப்சிடியன் பிளாக் மற்றும் ஆர்பர் கிரீன் என இரண்டு விதமான நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 11 ஆயிரத்து 999 என் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 2R அப்சிடியன் பிளாக் மற்றும் மிஸ்டி வைட் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 9 ஆயிரத்து 999 ஆகும்.

    இந்தியாவில் ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 2 முன்பதிவு பிப்ரவரி 07 ஆம் தேதி துவங்குகிறது. விற்பனை பிப்ரவரி 14 ஆம் தேதி துவங்குகிறது. ஒன்பிளஸ் ப்ரோ ப்ரோ 2R விற்பனை மார்ச் மாத வாக்கில் துவங்க இருக்கிறது. புதிய ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 2 வாங்குவோர் ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டு மற்றும் மாத தவணை முறையை பயன்படுத்தும் போது ரூ. 500 உடனடி தள்ளுபடி பெறலாம்.

    Next Story
    ×