search icon
என் மலர்tooltip icon

    கணினி

    ரூ. 2 ஆயிரம் பட்ஜெட்டில் ப்ளூடூத் காலிங் வசதியுடன் அறிமுகமான புது ஸ்மார்ட்வாட்ச்
    X

    ரூ. 2 ஆயிரம் பட்ஜெட்டில் ப்ளூடூத் காலிங் வசதியுடன் அறிமுகமான புது ஸ்மார்ட்வாட்ச்

    • நாய்ஸ் நிறுவனத்தின் புது ஸ்மார்ட்வாட்ச் மாடல் ட்ரூ சின்க் தொழில்நுட்பத்தின் மூலம் ப்ளூடூத் காலிங் வசதியை வழங்குகிறது.
    • இந்த ஸ்மார்ட்வாட்ச்-இல் பில்ட்-இன் கால்குலேட்டர், நோட்டிஃபிகேஷன் டிஸ்ப்ளே, வானிலை மற்றும் பங்கு சந்தை அப்டேட்கள் உள்ளன.

    நாய்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய நாய்ஸ்ஃபிட் டுவிஸ்ட் ஸ்மார்ட்வாட்ச்-ஐ அறிமுகம் செய்து இருக்கிறது. ப்ளூடூத் சார்ந்து இயங்கும் புது நாய்ஸ்ஃபிட் டுவிஸ்ட் மாடலில் 1.38 இன்ச் TFT LCD ஸ்கிரீன், 550 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 100-க்கும் அதிக வாட்ச ஃபேஸ்கள் உள்ளன. இதில் நாய்ஸ் உள்ள ட்ரூ சின்க் தொழில்நுட்பம் குயிக் பேரிங் மற்றும் குறைந்த மின் பயன்பாட்டில் ப்ளூடூத் காலிங் வசதியை வழங்குகிறது.

    இத்துடன் நாய்ஸ் ஹெல்த் சூட் மூலம் 24x7 இதய துடிப்பு சென்சார், SpO2. ஸ்லீப் டிராக்கர், ஸ்டிரெஸ் மேனேஜ்மெண்ட் மற்றும் பல்வேறு அம்சங்கள் உள்ளது. இதில் 100-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்கள், பில்ட்-இன் கால்குலேட்டர், நோட்டிஃபிகேஷன் டிஸ்ப்ளே, வானிலை மற்றும் பங்குசந்தை அப்டேட்கள், கேமரா கண்ட்ரோல், மியூசிக் கண்ட்ரோல், குயிக் ரிப்ளை, ஸ்மார்ட் DND மற்றும் இதர அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

    மேலும் IP68 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கும் நாய்ஸ்ஃபிட் டுவிஸ்ட் ஸ்மார்ட்வாட்ச் முழு சார்ஜ் செய்தால் ஏழு நாட்களுக்கான பேட்டரி லைஃப் வழங்குகிறது.

    நாய்ஸ்ஃபிட் டுவிஸ்ட் அம்சங்கள்:

    1.3 இன்ச் TFT LCD ஸ்கிரீன், 550 நிட்ஸ் பீக் பிரைட்னஸ்

    ப்ளூடூத் காலிங் மற்றும் நாய்ஸ் ட்ரூ சின்க் தொழில்நுட்பம்

    100-க்கும் அதிக வாட்ச் ஃபேஸ்கள்

    24x7 இதய துடிப்பு சென்சார், SpO2

    100-க்கும் அதிக வொர்க் அவுட் மோட்கள்

    IP68 வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட்

    அதிகபட்சம் ஏழு நாட்களுக்கான பேட்டரி லைஃப்

    ப்ளூடூத் காலிங் பயன்படுத்தும் போது இரண்டு நாட்களுக்கான பேட்டரி லைஃப்

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    நாய்ஸ்ஃபிட் டுவிஸ்ட் ஸ்மார்ட்வாட்ச் ஜெட் பிளாக், சில்வர் கிரே, ரோஸ் வைன், ரோஸ் பின்க் மற்றும் ஸ்பேஸ் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இதன் விற்பனை ஜனவரி 12 ஆம் தேதி துவங்குகிறது. அறிமுக சலுகையாக இதன் விலை ரூ. 1999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விற்பனை அமேசான் வலைதளத்தில் நடைபெற இருக்கிறது.

    Next Story
    ×