search icon
என் மலர்tooltip icon

    கணினி

    சக்திவாய்ந்த எஸ்9 பிராசஸர் கொண்ட ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9 அறிமுகம்
    X

    சக்திவாய்ந்த எஸ்9 பிராசஸர் கொண்ட ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9 அறிமுகம்

    • ஆப்பிள் நிறுவனத்தின் வாட்ச் சீரிஸ் 9 மாடல் 18 மணி நேரத்திற்கு பேட்டரி பேக்கப் வழங்குகிறது.
    • ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9 மாடலில் உடல்நலன் சார்ந்த அம்சங்களை சிரி வழங்குகிறது.

    ஆப்பிள் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9 மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9 மாடலில் ஆப்பிள் எஸ்9 சிப்செட் மூலம் இயங்குகிறது. இதில் உள்ள டபுள் டாப் அம்சம் கொண்டு அழைப்புகளை இயக்கும் வசதி வழங்கப்படுகிறது. அந்த வகையில், ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9 மாடலின் பல்வேறு அம்சங்களை டபுள் டேப் மூலம் இயக்கிவிட முடியும்.

    இந்த அம்சம் மெஷின் லெர்னிங் அல்காரிதம் மற்றும் ஏராளமான சென்சார்களின் உதவியோடு இயங்குகிறது. ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9 அறிவிப்பின் போது 2030 ஆண்டு வாக்கில் ஆப்பிள் நிறுவனம் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத நிறுவனம் என்ற நிலையை அடையும் என்று தெரிவித்தது. இதற்காக ஆப்பிள் பொருட்களில் பெரும்பாலும் மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களே பயன்படுத்தப்படுவதாக ஆப்பிள் தெரிவித்தது.

    ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9 மாடல் சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாத வகையில் உருவாக்கப்பட்டு இருப்பதாக ஆப்பிள் தெரிவித்துள்ளது. இதனை உணர்த்தும் சிறப்பு லோகோ ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9 பாக்ஸ்-இல் இடம்பெற்று இருக்கிறது.

    ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 2 மாடலில், ஆப்பிள் இதுவரை உருவாக்கியதிலேயே அதிக பிரைட்னஸ் கொண்ட டிஸ்ப்ளே உள்ளது. இந்த மாடலிலும் எஸ்9 சீரிஸ் சிப்செட் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் உள்ள பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 36 மணி நேரத்திற்கு பேட்டரி பேக்கப் வழங்குகிறது. புதிய ஆப்பிள் வாட்ச் மாடல்களுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கிவிட்டது. விற்பனை செப்டம்பர் 22-ம் தேதி துவங்குகிறது.

    Next Story
    ×