search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஹாரீஸ் ரவூப்"

    • 7, 8 ஓவரில் உம்ரான் மாலிக் வேகம் 138 என்றளவுக்கு குறைந்து விடுகிறது.
    • 160 கி.மீ வேகத்தில் யார் வேண்டுமானாலும் வீசலாம் ஆனால் அதை போட்டி முழுவதும் கடைப்பிடிப்பதே மிகவும் முக்கியமாகும்.

    ஜம்மு காஷ்மீரை சேர்ந்த இளம் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக் கடந்த 2021 ஐபிஎல் தொடரில் அறிமுகமாகினார். அவர் ஆரம்பத்திலேயே 145 கி.மீ வேகத்தில் எதிரணி வீரர்களை திணறடித்து அப்போதைய கேப்டன் விராட் கோலியின் பாராட்டுகளை பெற்றார்.

    அதனால் இந்தியாவுக்காகவும் தேர்வு செய்யப்பட்ட அவர் அதி வேகத்தில் பந்து வீசினாலும் ரன்களை வாரி வழங்கியதால் 2 போட்டிகளுடன் கழற்றி விடப்பட்டார். அதைத்தொடர்ந்து உள்ளூர் கிரிக்கெட்டுக்கு சென்ற உம்ரான் மாலிக் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி மீண்டும் இந்திய அணிக்கு தேர்வாகியுள்ளார்.

    இந்நிலையில் பாகிஸ்தானின் அதிவேக பந்து வீச்சாளராக கருதப்படும் ஹரிஸ் ரவூப் அருகே கூட உம்ரான் மாலிக் வர முடியாது என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஆகிப் ஜாவேத் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:-


                                                                                                        ஆகிப் ஜாவேத்                                                                                             

    ஹரிஸ் ரவூப் போல் உம்ரான் மாலிக் நல்ல பயிற்சியும் ஃபிட்டாகவும் இல்லாதவராக இருக்கிறார். ஒருநாள் கிரிக்கெட்டில் அவரை நீங்கள் பார்க்கும் போது அவருடைய முதல் ஸ்பெல் 150 கி.மீ வேகத்தில் இருக்கிறது. ஆனால் 7, 8 ஓவரில் அவரது வேகம் 138 என்றளவுக்கு குறைந்து விடுகிறது. இது இந்திய பேட்டிங் துறையில் விராட் கோலிக்கும் இதர வீரர்களுக்கும் உள்ள வித்தியாசத்தை போன்றதாகும்.

    மறுபுறம் ஹரிஸ் ரவூப் அதிவேகமாக வீசுவதற்காக தனது உணவு பழக்கம், வாழ்க்கை முறை, பயிற்சி என அனைத்தையும் மாற்றிக் கொண்டுள்ளார். குறிப்பாக வேகமாக செயல்படுவதற்காக உணவு கட்டுப்பாட்டை வைத்திருக்கும் அவரைப் போன்ற வேறு பாகிஸ்தான் பவுலரை நான் பார்த்ததில்லை. அவரைப் போன்ற வாழ்க்கை முறையும் யாரும் பின்பற்றுவதில்லை.

        160 கி.மீ வேகத்தில் யார் வேண்டுமானாலும் வீசலாம் ஆனால் அதை போட்டி முழுவதும் கடைப்பிடிப்பதே மிகவும் முக்கியமாகும்.

    என்று ஆகிப் ஜாவேத் கூறினார்.

    ×