search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வேலை வாங்கி தருவதாக மோசடி"

    • வேலை இல்லாமல் இருக்கும் வாலிபர்களை குறி வைத்து வேலை வாங்கி தருவதாக மோசடியில் ஈடுபட்டுள்ளார்.
    • போலீசார் தேடுவதை அறிந்த தன்யா தனது கணவருடன் தலை மறைவாகி விட்டார்.

    கோவை:

    கோவை சிங்கா நல்லூரை சேர்ந்தவர் தன்யா(வயது39). இவரது கணவர் கருணாநிதி(45). தன்யா வேலை இல்லாமல் இருக்கும் வாலிபர்களை குறி வைத்து வேலை வாங்கி தருவதாக மோசடியில் ஈடுபட்டுள்ளார்.

    அந்த வகையில் கோவை சூலூரை சேர்ந்த முருகன் என்பவர் வேலை தேடி அலைந்தார். அப்போது முருகனுக்கு தன்யாவின் அறிமுகம் கிடைத்தது. தன்யா, தான் கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் வேலை பார்த்து வருவதாகவும், அங்கு நர்சு, மருத்துவ உதவியாளர், அலுவலக உதவியாளர், டிரைவர் வேலை காலியாக இருப்பதாக கூறியுள்ளார்.

    இதனை உண்மை என நம்பிய முருகனும் பல லட்சம் ரூபாயை பணத்தை தன்யாவிடம் கொடுத்தார். அவரிடம் இருந்து ஒரிஜினல் சான்றிதழை பெற்ற தன்யா, அவருக்கு பணி நியமன ஆைணயையும் வழங்கினார்.

    இதை வைத்து கொண்டு முருகன் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் பணிக்கு சேர முயன்றார். அப்போது தான் அவருக்கு தான் வைத்திருந்த நியமன ஆணை போலியானது என்பது தெரியவந்தது.

    உடனடியாக சம்பவம் குறித்து சிங்காநல்லூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் விசாரித்தனர். இந்த நிலையில் நேற்று சூலூரை சேர்ந்த நவுபல், சரவணக்குமார், நந்தகுமார், சுரேந்திரன், தேவராஜ், விக்னேஷ், அகிலன், கோகுல், ரஞ்சிதா ஆகியோர் கோவை குற்றப்பிரிவில் புகார் அளித்தனர்.

    அதில் தன்யா, தங்களிடம் வேலை வாங்கி தருவதாக ரூ.50 லட்சம் மோசடி செய்திருப்பதாக கூறியிருந்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதற்கிடையே போலீசார் தேடுவதை அறிந்த தன்யா தனது கணவருடன் தலை மறைவாகி விட்டார்.

    இந்த நிலையில் இவர்களை பிடிப்பதற்காக 2 தனிப்படை அமை க்கப்பட்டது. தன்யாவின் கணவரின் சொந்த ஊர் கேரளா ஆகும். இதனால் தன்யா கணவருடன் கேரளாவில் பதுங்கியிருக்கலாம் எனவும் போலீசார் சந்தேகிக்கின்றனர். இதையடுத்து தனிப்படையினர் கேரளாவுக்கு சென்று தம்பதியை தேடி வருகின்றனர்.

    ×