search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வேலூர் புதிய பஸ் நிலையம்"

    • கலெக்டர் அலுவலகத்தில் மனு
    • பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாவதாக புகார்

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம் அணைக்கட்டு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஒடுகத்தூர் பகுதியில் இருந்து வேலூருக்கு தினசரி பல்லாயிரக்கணக்கான மக்கள் வேலைக்காகா அரசு மற்றும் தனியார் பஸ்களில் வந்து செல்கின்றனர்.

    இந்த பஸ்கள் புதிய பஸ் நிலையத்திலிருந்து இயக்கப்பட்டு பழைய பஸ் நிலையம் வந்து ஒடுகத்தூர் பகுதிக்கு அணைக்கட்டு வழியாக சென்று வந்தன. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக எவ்வித அறிவிப்பும் இல்லாமல் அனைத்து பஸ்களும் புதிய பஸ் நிலையத்திற்கு வராமல் பழைய பஸ் நிலையத்திலிருந்து மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றது.

    இதனால் சென்னை, காஞ்சிபுரம், ஆந்திரா, பெங்களூர், திருப்பத்தூர், ஆகிய பகுதிகளுக்கு செல்லக்கூடிய மக்கள் மற்றும் அங்கிருந்து வரக்கூடிய மக்கள் புதிய பஸ் நிலையத்தில் இறங்கி ஒடுகத்தூர் பஸ்ஸை பிடிக்க முடியாமல், சிரமப்பட்டு ஆட்டோ அல்லது நகரப் பஸ்களை தேடி பிடித்து பழைய பஸ் நிலையத்திற்கு வந்து அவதிபடுகின்றனர்.

    அதேபோல் ஒடுகத்தூர் பகுதியில் இருந்து மேற்கண்ட பகுதிகளுக்கு செல்லும் பயணிகள் பழைய பஸ் நிலையத்தில் இறக்கி விடுவதால் அங்கிருந்து புதிய பஸ் நிலையம் செல்ல கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

    மக்களின் நலனை கருத்தில் கொண்டு ஓசூர் மற்றும் இளவம்பாடி வழியாக ஒடுகத்தூர் மற்றும் ஆலங்காயம் பகுதிக்கு இயக்கப்படும் பஸ்கள் அனைத்தும் வழக்கம் போல புதிய பஸ் நிலையத்தில் இருந்து இயக்க வேண்டும்.

    ஒடுகத்தூர் பகுதிக்கு வருகின்ற அனைத்து பஸ்களும் புதிய பஸ் நிலையத்திலிருந்து இயக்க வேண்டும். பொதுமக்கள் மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் லதா சார்பாக கலெக்டர் குமாரவேல் பாண்டியனிடன் கோரிக்கை மணு அளித்துள்ளனர்.

    ×