search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெலிங்டனில்"

    • தேசிய நெடுஞ்சாலை துறையினர் நோட்டீஸ் வழங்கினர்.
    • 100 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுமக்கள் தேசிய நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து வீடுகள் கட்டி வாழ்ந்து வருகின்றனர்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் குன்னூர் முதல் ஊட்டி வரை தேசிய நெடுஞ்சாலையை விரிவாக்கம் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    குன்னூர் மலைப்பாதையில் சாலையின் இரு புறமும் மண் மற்றும் ராட்சத பாறைகள் அகற்றி விரிவுபடுத்தும் பணியானது நடந்து வருகிறது.

    இதேபோல் தற்போது குன்னூர் முதல் ஊட்டி வரை சாலையை விரிவாக்கம் செய்யும் பணியானது முழு வீச்சில் நடக்கிறது. இந்த நிலையில் வெலிங்டன் பகுதியில் கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுமக்கள் தேசிய நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து வீடுகள் கட்டி வாழ்ந்து வருகின்றனர்.

    தற்போது சாலை விரிவாக்க பணி நடந்து வருவதால், அங்கு சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள 60க்கும் மேற்பட்ட வீடுகளை இடிக்க தேசிய நெடுஞ்சாலை துறையினர் நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.

    ஒரு வாரத்திற்குள் தாங்களாகவே இடிக்க வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் தேசிய நெடுஞ்சாலையை துறையினர் இடித்து, அதற்கான தொகையை வசூல் செய்ய உள்ளதாகவும் நோட்டீஸ் வழங்கி உள்ளனர். இதனால் இதனால் அந்த பகுதியில் வாழ்ந்து வரும் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    ×