search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விவசாயிகள் மாநாடு"

    • கிரி எம்.எல்.ஏ. பங்கேற்பு
    • மக்கள் கோரிக்கை மனு

    செங்கம்,

    செங்கம் தாசில்தார் அலுவலகத்தில் வருவாய் தீர்வாய ஜமாபந்தி நிறைவு நாள் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) தேன்மொழி ஜமாபந்தி அலுவலராக கலந்து கொண்டார்.

    கடந்த 19-ந் தேதி தொடங்கிய ஜமாபந்தி செங்கம் வட்டத்தில் உள்ள செங்கம், இறையூர், பாய்ச்சல், மேல்பள்ளிப்பட்டு மற்றும் புதுப்பாளையம் உள்ளிட்ட 5 உள்வட்டங்களுக்கு நடைபெற்றது.

    ஜமாபந்தி நிறைவு நாளான நேற்று புதுப்பாளையம் உள்வட்டத்தில் உள்ள கிராமப் பகுதி மக்கள் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

    இந்த நிகழ்வினை தொடர்ந்து விவசாயிகள் மாநாடு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு. பெ. கிரி கலந்து கொண்டார். செங்கம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் விஜயராணிகுமார், பேரூராட்சி தலைவர் சாதிக்பாஷா முன்னிலை வகித்தார்.

    இந்த நிகழ்ச்சியில் விவசாயிகள் தரப்பில் தங்களது கோரிக்கைகள் குறித்து அதிகாரிகள் முன்னிலையில் விவசாய சங்கத் பிரதிநிதிகள் பேசினர். ஜமாபந்தி நிகழ்வில் கோரிக்கை மனுக்கள் அளித்த பல்வேறு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி சிறப்புரையாற்றினார்.

    இந்த நிகழ்வில் செங்கம் தாசில்தார் முனுசாமி, நகர செயலாளர் அன்பழகன் முன்னாள் பேரூராட்சி தலைவர், சென்னம்மாள் முருகன், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் ரேணுகா, துணை தாசில்தார்கள் தமிழரசி, லதா, வருவாய் ஆய்வாளர்கள் சரண்ராஜ், ஞானவேல், கிராம நிர்வாக அலுவலர்கள் விஜயகுமார், கமலஹாசன், சந்திரகுமார் உள்பட வருவாய் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    ×