search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வனத்துறையினர் ஆய்வு"

    • கன்று குட்டியை சாதாரண விலங்குகள் இழுத்துச் செல்ல முடியாது என்றும், இழுத்துச் சென்றது சிறுத்தை புலியாகத்தான் இருக்கும் என்றும் பொதுமக்கள் அச்சுத்துடன் தெரிவித்தனர்.
    • பரிசோதனைக்கு பின்னர் தான் கடித்தது சிறுத்தை புலியா அல்லது வேறுவிலங்கா என தெரியவரும்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலை அருகே இருக்கூர் செஞ்சுடையாம்பாளையம் போயன்தோட்டத்தைச் சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் செந்தில்ராஜா. இவர் வீட்டில் எருமை மற்றும் பசுமாடுகள் வளர்த்து வருகிறார்.

    இவரது மாட்டு தொழுவத்தில் கட்டியிருந்த பிறந்து 40 நாட்களே ஆன சுமார் 30 கிலோ எடையுள்ள பசு கன்றை காணவில்லை என பரமத்தி போலீஸ் நிலையத்திற்கு கடந்த 31-ந்தேதி இரவு தகவல் தெரிவித்தார். இந்த நிலையில் கன்று குட்டி மாட்டு தொழுவத்தில் இருந்து சுமார் 1½ கிலோ மீட்டர் தூரத்திற்கு அப்பால் உள்ள ஒரு மரவள்ளி கிழங்கு பயிரிடப்பட்ட தோட்டத்தில் இறந்து கிடப்பதாக செந்தில்ராஜாவுக்கு தகவல் கிடைத்தது.

    இதனையடுத்து செந்தில்ராஜா மற்றும் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் அங்கு சென்று பார்த்தபோது, மர்ம விலங்கு கன்று குட்டியின் கழுத்தில் கடித்த படி வீட்டில் இருந்து 1½ கிலோமீட்டர் தூரம் இழுத்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து இருக்கூர் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் நாமக்கல் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து இருக்கூர் கிராம நிர்வாக அலுவலர் வேணுகோபால் மற்றும் நாமக்கல் வனவர்கள் சந்திரசேகர், பிரியங்கா ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து மர்ம விலங்கின் கால் தடங்களை பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செந்தில்ராஜாவின் மாட்டுத் தொழுவத்தில் இருந்து சுமார் 1½ கிலோமீட்டர் தூரம் வரை கன்று குட்டியின் கழுத்தில் கவ்வி இழுத்து சென்று ரத்தத்தை மட்டும் உறிஞ்சி குடித்து விட்டு, உடலை மரவள்ளி கிழங்கு தோட்டத்தில் மர்ம விலங்கு போட்டு விட்டு சென்ற செய்தி அப்பகுதியில் பரவியது. இதனால் மக்களிடையே பரபரப்பும் அச்சமும் ஏற்பட்டு உள்ளது.

    இது குறித்து அப்பகுதியை சேர்ந்த சிலர், கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம விலங்கு ஒன்றை பார்த்ததாகவும், அப்பகுதியில் அதன் கால் தடங்கள் பதிந்து உள்ளதாகவும் தெரிவித்தனர். மேலும் கன்று குட்டியை சாதாரண விலங்குகள் இழுத்துச் செல்ல முடியாது என்றும், இழுத்துச் சென்றது சிறுத்தை புலியாகத்தான் இருக்கும் என்றும் அச்சுத்துடன் தெரிவித்தனர்.

    இந்த நிலையில் இன்று இறந்து போன கன்று குட்டிக்கு பிரேத பரிசோதனை நடைபெற்றது. பரிசோதனைக்கு பின்னர் தான் கடித்தது சிறுத்தை புலியா அல்லது வேறுவிலங்கா என தெரியவரும்.

    • பழங்குடி கிராமங்களுக்கு அடிப்படை வசதிகள் செய்துதர மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
    • மாவட்ட வன அலுவலா் கொம்மு ஓம்காரம் தலைமையில் வனத் துறையினா் அங்கு ஆய்வு மேற்கொண்டனா்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் கூடலூா் தாலுகா தேவா்சோலை பேரூராட்சியில் உள்ள செம்பக்கொல்லி, பீச்சனக்கொல்லி பழங்குடி கிராமங்களுக்கு சாலை, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்துதர அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.இதனை தொடா்ந்து மாவட்ட வன அலுவலா் கொம்மு ஓம்காரம் தலைமையில் வனத் துறையினா் அங்கு ஆய்வு மேற்கொண்டனா். அப்போது போஸ்பாரா பகுதியில் இருந்து செம்பக்கொல்லி கிராமத்துக்கு செல்லும் சுமாா் 2.5 தூரம் வனபகுதியில் உள்ள மண் சாலையை சீரமைப்பது, அடிப்படை வசதிகள் மற்றும் பள்ளிக்கூடம் அமைக்க போதுமான சாத்தியக் கூறுகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டனா்.ஆய்வின்போது தேவா்சோலை பேரூராட்சியின் துணைத் தலைவா் யூனஸ் பாபு மற்றும் வன அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

    ×