search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வன ஊழியர் பலி"

    • சாந்தன் பாறை பன்னியார் தேயிலை தோட்டத்தில் புகுந்த காட்டு யானையை விரட்டும் பணியில் சக்திவேல் ஈடுபட்டார்.
    • எதிர்பாராதவிதமாக யானை சக்திவேலை தும்பிக்கையால் பிடித்து தூக்கி வீசியது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் சாந்தன்பாறை பன்னியர் தோட்டம் அருகே உள்ள அய்யப்பன் குடி பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல்.

    இவர் தேவிகுளம் வனச்சரக அலுவலகத்தில் வனக்காவலராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் அந்தப் பகுதியில் உள்ள தேயிலை தோட்டங்களில் அடிக்கடி காட்டு யானைகள் புகுந்து அட்டகாசம் செய்வதாக புகார் வந்தது.

    இதனை தொடர்ந்து யானைகளை விரட்டும் பணிக்கு சக்திவேல் அனுப்பப்பட்டார். எந்தப் பகுதியில் யானை வந்தாலும் வழக்கமாக அங்கு சக்திவேல் அனுப்பி வைக்கப்படுவாராம்.

    அதன்படி நேற்று காலை சாந்தன் பாறை பன்னியார் தேயிலை தோட்டத்தில் புகுந்த காட்டு யானையை விரட்டும் பணியில் சக்திவேல் ஈடுபட்டார். அப்போது எதிர்பாராதவிதமாக யானை அவரை தும்பிக்கையால் பிடித்து தூக்கி வீசியது.

    மேலும் காலடியில் போட்டும் மிதித்தது. இதில் பலத்த காயம் அடைந்த சக்திவேல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பான தகவல் கிடைத்ததும் வனத்துறையினர் விரைந்து சென்று காட்டு யானையை விரட்டி அடித்தனர். பின்னர் சக்திவேல் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேவிகுளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    ×