search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வங்காள தேச கிரிக்கெட் போர்டு"

    ஜிம்பாப்வே மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இந்த வருடம் இறுதியில் வங்காள தேசம் சென்று விளையாட இருக்கிறது. #BANvWI #BANvZIM
    வங்காள தேச கிரிக்கெட் அணி தற்போது வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. ஜிம்பாப்வே அணி அடுத்த வருடம் தொடக்கத்தில் வங்காள தேசம் சென்று இரண்டு டெஸ்ட் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாட முடிவு செய்திருந்தது.

    அந்த சமயத்தில் வங்காள தேசத்தில் தேர்தல் நடக்க இருப்பதால் ஜிம்பாப்வேயிற்கு எதிரான தொடரை இந்த வருடம் அக்டோபர் மாதத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. அதன்பின் இரண்டு டெஸ்ட், மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாட வங்காள தேசம் அவெஸ்ட் இண்டீஸ் செல்கிறது.

    ஆகவே, வங்காள தேசம் ஜிம்பாப்வே, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுடன் அடுத்தடுத்து விளையாடுகிறது. ஜிம்பாப்வே தொடருக்கான போட்டி அட்டவணை இன்னும் வெளியிடப்படவில்லை. இந்த தொடர் அக்டோபர் மாதம் நடக்கிறது. அதன்பின் நவம்பர் 15-ந்தேதியில் இருந்து டிசம்பர் 22-ந்தேதி வரை வெஸ்ட் இண்டீஸ் உடன் மோதுகிறது.
    வங்காள தேச கிரிக்கெட் அணியின் பேட்டிங் ஆலோசகராக முன்னாள் தென்ஆப்பிரிக்கா பேட்ஸ்மேன் மெக்கென்சி நியமிக்கப்பட்டுள்ளார். #BCB
    வங்காள தேச கிரிக்கெட் அணியின் பேட்டிங் ஆலோசகர் பதவி காலியாகவே இருந்து வந்தது. சுமார் ஓராண்டிற்குப் பிறகு தென்ஆப்பிரிக்காவின் முன்னாள் பேட்ஸ்மேன் நீல் மெக்கென்சி நியமிக்கப்பட்டுள்ளார்.

    தற்போது வங்காள தேச அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் வருகிற 24-ந்தேதி தொடங்குகிறது. அப்போது மெக்கென்சி அணியுடன் இணைவார்.



    வங்காள தேச அணியின் தலைமை பயிற்சியாளராக ஸ்டீவ் ரோட்ஸ், பந்து வீச்சு ஆலோசகராக ரியால் குக் ஆகியோர் கடந்த மாதம் நியமிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன் திலன் சமரவீரா பேட்டிங் ஆலோசகராக இருந்துள்ளார். அவர் சென்ற பின்னர், சைமன் ஹெல்மோட் இடைக்கால ஆலோசகராக பணியாற்றினார். #BCB #NeilMcKenzie
    ×