search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லைட்இயர்"

    • உலகின் முதல் சோலார் கார் அறிமுகம் செய்யப்பட்டது.
    • இந்த கார் மொத்தத்தில் 946 யூனிட்களே உற்பத்தி செய்யப்பட இருக்கின்றன.

    சூரிய ஓளியில் சார்ஜ் ஏற்றிக் கொள்ளும் சோலார் எலெக்ட்ரிக் வாகன ஸ்டார்ட் அப் நிறுவனம் தான் லைட்இயர். இந்த நிறுவனம் சூரிய ஓளியில் இயங்கும் உலகின் முதல் கார் மாடலை சமீபத்தில் அறிமுகம் செய்தது. இது ப்ரோடக்‌ஷன் ரெடி சோலார் எலெக்ட்ரிக் கார் ஆகும். இந்த சோலார் கார் லைட்இயர் ஒ என அழைக்கப்படுகிறது.

    நெதர்லாந்தை சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனமான லைட்இயர் தனது லைட்இயர் ஒ சோலார் எலெக்ட்ரிக் கார் மாடலுக்கான முன்பதிவை இந்த ஆண்டு இறுதியில் துவங்க உள்ளது. லைட்இயர் ஒ எலெக்ட்ரிக் கார் 624 கிலோமீட்டர் ரேன்ஜ் கொண்டது ஆகும். லைட்இயர் மாடலில் 5 சதுர அடி அளவில் இறண்டு வளைந்த சோலார் பேனல்கள் உள்ளன.


    இந்த எலெக்ட்ரிக் காரில் 60 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் மற்றும் நான்கு எலெக்ட்ரிக் மோட்டார்கள் உள்ளன. இந்த கார் அதிகபட்சமாக 174 ஹெச்.பி. பவர் வெளிப்படுத்துகிறது. லைட்இயர் ஒ மாடல் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை பத்து நொடிகளுக்குள் எட்டி விடும். இந்த கார் மணிக்கு அதிகபட்சமாக 160 கிலோமீட்டர் வரை செல்லும்.

    இந்த காரில் உள்ள ஆப்டிமைஸ் செய்யப்பட்ட சோலார் ரூஃப் காரை பல மாதங்கள் வரை சார்ஜ் செய்யாமல் இயக்கும் வசதியை வழங்குகிறது. மேலும் இதில் 10.1 இன்ச் செண்டர் டச் ஸ்கிரீன், ஆண்ட்ராய்டு ஆட்டோமோடிவ் மற்றும் கூகுள் நேடிவ் ஒ.எஸ். போன்ற அம்சங்கள் உள்ளது.

    லைட்இயர் ஒ மாடலுக்கு அவ்வப்போது ஓவர்-தி-ஏர் முறையில் அப்டேட்கள் வழங்கப்பட இருக்கின்றன. இந்த கார் மொத்தத்தில் 946 யூனிட்கள் உற்பத்தி செய்யப்பட உள்ளன. இந்த காரின் விலை 2 லட்சத்து 63 ஆயிரத்து 262 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 2 கோடி வரை நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது.

    ×