search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராம்ராஜ் காட்டன்"

    • ஆர்.கே.ஆர்.குழும நிறுவனங்களின் தலைவரும், தேசிய நல்லாசிரியர் விருது பெற்றவருமான ஆர்.கே.ராமசாமி திறந்து வைத்தார்.
    • இலங்கை, சிங்கப்பூர், மலேசியா போன்ற வெளிநாடுகளுக்கும் வேட்டி- சட்டை ரகங்களை ஏற்றுமதி செய்து சாதனை படைத்து வருகிறது” என்றார்.

    உடுமலை :

    'ராம்ராஜ் காட்டன்' நிறுவனத்தின் புதிய ஷோரூம் திருப்பூர் மாவட்டம் உடுமலையில் பொள்ளாச்சி-பழனி சாலை காமராஜர் சிலை அருகில் தொடங்கப்பட்டுள்ளது. இதனை ஆர்.கே.ஆர்.குழும நிறுவனங்களின் தலைவரும், தேசிய நல்லாசிரியர் விருது பெற்றவருமான ஆர்.கே.ராமசாமி திறந்து வைத்தார். தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் மாநில துணைத்தலைவர் ஏ.எஸ்.ஜி.பி. பாலநாகமாணிக்கம் முதல் விற்பனையை தொடங்கி வைக்க, சி.என்.ஆர். டிரேடிங் மற்றும் சி.என்.ஆர்.திருமண மகால் தலைவர் சி.என்.ராமராஜ் பெற்றுக்கொண்டார்.

    முன்னதாக 'ராம்ராஜ் காட்டன்' நிறுவனர் கே.ஆர்.நாகராஜன் அனைவரையும் வரவேற்று பேசினார். அப்போது அவர் கூறுகையில் "எங்களது நிறுவனம் தமிழகம் முழுவதும் வெண்மை நிற ஆடைகளை உற்பத்தி செய்து விற்பனையில் சாதனை படைத்து வருகிறது. பாரம்பரியத்தையும், பண்பாட்டையும் காப்ப–தில் அக்கறை கொண்டுள்ள ராம்ராஜ் நிறுவனம் தமிழகத்தில் அனைத்து முக்கிய நகரங்களிலும் தனது ஷோரூம்களை திறந்து வெற்றி கண்டுள்ளது. மேலும் இலங்கை, சிங்கப்பூர், மலேசியா போன்ற வெளிநாடுகளுக்கும் வேட்டி- சட்டை ரகங்களை ஏற்றுமதி செய்து சாதனை படைத்து வருகிறது" என்றார்.

    • முதலீட்டாளர்கள் மாநாட்டில் ராம்ராஜ் காட்டன் நிறுவனம் சார்பாக ரூ.1000 கோடிக்கான தொழில் முதலீட்டில், நூற்பு நெசவு மற்றும் பதப்படுத்தும் ஆலையை அமைக்க ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
    • முதல்-அமைச்சரிடம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ராம்ராஜ் காட்டன் நிறுவனர் கே.ஆர்.நாகராஜன் வழங்கினார்.

    திருப்பூர் :

    சென்னையில் உள்ள தாஜ் கோரமண்டல் ஓட்டலில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் ராம்ராஜ் காட்டன் நிறுவனம் சார்பாக ரூ.1000 கோடிக்கான தொழில் முதலீட்டில் 4 ஆயிரம் ேபருக்கு வேலைவாய்ப்பு, நூற்பு நெசவு மற்றும் பதப்படுத்தும் ஆலையை அமைக்க ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ராம்ராஜ் காட்டன் நிறுவனர் கே.ஆர்.நாகராஜன் வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசின் தொழில் முதலீட்டு வழிகாட்டு குழுவின் தலைமை நிர்வாக அதிகாரி பூஜா குல்கர்னி செய்திருந்தார். இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து கே.ஆர்.நாகராஜன் கூறும்போது , தமிழக அரசுடன் இணைந்து செயல்படுத்தவிருக்கும் தொழில் முதலீடுகள் மூலமாக இ்ன்னும் பல்லாயிரக்கணக்கான நெசவாளர்களுக்கு முழுமையான வேலைவாய்ப்பு அமைவதுடன், தொழில் முன்னேற்றத்தில் தமிழகத்தை வளர்ச்சிப்பாதையில் அழைத்து செல்ல பேருதவியாக இருக்கும் என்றார்.

    ×