search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராஜேந்திர பால் கவுதம்"

    • டெல்லியில் நடந்த மதமாற்ற நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கானோர் பவுத்த மதத்திற்கு மாறுவதாக உறுதிமொழி எடுத்தனர்.
    • அதில் பங்கேற்ற மந்திரி ராஜேந்திர பால் கவுதமை பதவி நீக்கம் செய்யுமாறு பா.ஜ.க. கோரியது.

    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த மதமாற்ற நிகழ்ச்சியில் டெல்லி சமூக நலத்துறை மந்திரி ராஜேந்திர பால் கவுதம் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கானோர் பவுத்த மதத்திற்கு மாறுவதாக உறுதிமொழி எடுத்தனர்.

    இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த பா.ஜ.க.வினர், கவுதமை பதவி நீக்கம் செய்யுமாறு கோரினர். மேலும், வதோதராவில் நேற்று நடந்த ஆம் ஆத்மியின் 'திரங்கா பேரணி'க்கு முன்னதாக ஆளும் பாஜக ஆதரவாளர்கள் ஆம் ஆத்மி கட்சி பேனர்களை கிழித்துள்ளனர்.

    இந்நிலையில், பா.ஜ.க.விடமிருந்து எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து, டெல்லி சமூக நலத்துறை மந்திரி ராஜேந்திர பால் கவுதம் இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், இன்று மகரிஷி வால்மீகிஜி யின் வெளிப்பாடு நாள் மற்றும் மான்யவர் கன்ஷி ராம் சாஹேப் அவர்களின் நினைவு நாள். அப்படியொரு நாளில் தற்செயலாக இன்று நான் பல தடைகளில் இருந்து விடுபட்டுள்ளேன். இன்று நான் மீண்டும் பிறந்துள்ளேன். இப்போது நான் இன்னும் உறுதியாக, சமூகத்தின் மீதான உரிமைகளுக்காக மற்றும் அட்டூழியங்களுக்கு எதிராக எந்த தடையுமின்றி உறுதியாக தொடர்ந்து போராடுவேன் என தெரிவித்தார்.

    ×