search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரவுடியை கொன்ற நண்பன்"

    • 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் நேற்று காலை கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தது.
    • தியாகராஜன் (35) என்பவரை வளவனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்..

    விழுப்புரம்,:

    விழுப்புரம் அருகே அகரத்து மேடு கிராமத்தில் பில்லூர்-பஞ்சமாதேவி செல்லும் சாலை ஓரம் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் நேற்று காலை கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தது. இது தொடர்பான தகவலின் பேரில் வளவனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் அதன் ஒரு பகுதியாக இறந்து கிடந்தவர் குறித்து தகவல் தெரிந்தவர்கள் கூறுமாறு வாட்ஸ்அப், டிவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வளைதளங்களில் போலீசார் பரவவிட்டனர். மேலும், இறந்து கிடந்தவரின் கையில் தியாகு (எ) தியாகராஜன் என்று பச்சைக் குத்தப்பட்டிருந்ததை வைத்தும் போலீசார் விசாரித்து வந்தனர்   போலீசார் தீவிர விசாரணையில், கழுத்து அறுபட்டு இறந்து கிடந்தவர் குறிஞ்சிப்பாடி நடராஜன் மகன் சங்கர் (வயது 35) என்பது போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து வளவனூர் போலீசார் குறிஞ்சிப்பாடி போலீசாரை தொடர்பு கொண்டனர். அதில் இறந்து கிடந்த சங்கர் குறிஞ்சிப்பாடி போலீஸ் நிலையத்தின் ரவுடி லிஸ்டில் உள்ளது தெரிந்தது.

    இதையடுத்து தியாகு என்பவர் யார் என்று போலீசார் விசாரித்த போது, அவரும் குறிஞ்சிப்பாடியை சேர்ந்தவர் என்பதும் வடலூர் போலீஸ் நிலையத்தில் ரவுடி லிஸ்டில் தியாகு இருப்பது வளவனூர் போலீசாருக்கு தெரியவந்தது. இந்த 2 பேரும் நண்பர்கள். இந்த 2 பேரும் விழுப்புரம் அருகேயுள்ள பில்லூர் ராமநாதபுரத்தில் உள்ள தியாகுவின் அக்கா வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் வந்தனர் என்பதையும் போலீசாருக்கு தெரியவந்தது.  இதையடுத்து குறிஞ்சிப்பாடியைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் தியாகு (எ) தியாகராஜன் (35) என்பவரை வளவனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இறந்து கடந்த சங்கரை, தியாகு கொலை செய்து சாலையோரம் வீசி சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×