search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முலாயம்சிங் யாதவ்"

    • உடல்நிலை மோசமடைந்ததால், கடந்த 2-ந் தேதி தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார்
    • முலாயம் சிங் காலமானது தொடர்பான அறிவிப்பை அவரது மகன் அகிலேஷ் யாதவ் வெளியிட்டார்.

    குருகிராம்:

    சமாஜ்வாடி கட்சியின் நிறுவனரும், உத்தரபிரதேச மாநில முன்னாள் முதல்-மந்திரியுமான முலாயம்சிங் யாதவ் (வயது 82), உடல்நலக்குறைவு காரணமாக, கடந்த ஆகஸ்டு 22-ந் தேதி டெல்லி அருகே குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை மோசமடைந்ததால், கடந்த 2-ந் தேதி தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருந்து வந்தது. மூச்சுவிட முடியாத நிலை ஏற்பட்டதையடுத்து அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. எனினும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை.

    இந்நிலையில், நேற்று அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமானது. அவருக்கு உயிர் காக்கும் மருந்துகள் அளிக்கப்பட்டது. சிறப்பு மருத்துவர்கள் அடங்கிய குழு அவரது உடல்நிலையை தீவிரமாக கண்காணித்து வந்த நிலையில் இன்று காலையில் அவர் உயிர் பிரிந்தது. அவர் காலமானது தொடர்பான அறிவிப்பை அவரது மகன் அகிலேஷ் யாதவ் வெளியிட்டார். முலாயம் மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.

    • முலாயம்சிங் யாதவ் உடல்நலக்குறைவு காரணமாக ஆகஸ்டு 22-ந்தேதி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
    • கடந்த 2-ந் தேதி அவர் அங்குள்ள தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார்.

    குருகிராம் :

    சமாஜ்வாடி கட்சியின் நிறுவனரும், உத்தரபிரதேச மாநில முன்னாள் முதல்-மந்திரியுமான முலாயம்சிங், உடல்நலக்குறைவு காரணமாக, கடந்த ஆகஸ்டு 22-ந் தேதி டெல்லி அருகே குருகிராமில் உள்ள மெடண்டா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    அவரது உடல்நிலை மோசமடைந்ததால், கடந்த 2-ந் தேதி அவர் அங்குள்ள தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருந்து வந்தது.

    நேற்று அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமானது. அவருக்கு உயிர் காக்கும் மருந்துகள் அளிக்கப்பட்டதாகவும், சிறப்பு மருத்துவர்கள் அடங்கிய குழு அவரது உடல்நிலையை கண்காணித்து வருவதாகவும் ஆஸ்பத்திரி நிர்வாகம் தெரிவித்தது.

    ×