search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முன்னாள் நீதிபதி கர்ணன்"

    ஐகோர்ட் முன்னாள் நீதிபதி சி.எஸ்.கர்ணன் கொல்கத்தாவில் ஊழலுக்கு எதிரான புதிய கட்சியை தொடங்கி உள்ளார். பாராளுமன்ற தேர்தலில் மோடியை எதிர்த்து பெண் வேட்பாளரை நிறுத்த அவர் முடிவு செய்துள்ளார். #JusticeKarnan
    கொல்கத்தா:

    கொல்கத்தா ஐகோர்ட்டின் முன்னாள் நீதிபதி சி.எஸ்.கர்ணன். சென்னை ஐகோர்ட்டின் நீதிபதியாக இருந்த கர்ணனை பணியிட மாற்றம் செய்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

    ஆனால் தனது பணியிடம் மாற்றத்துக்கான சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு தடை விதித்தார். இதையடுத்து அவருக்கு வழக்குகளை ஒதுக்க கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. தான் தலித் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் குறி வைக்கப்படுகிறேன் என்று சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் மீது குற்றச்சாட்டுகளை கூறினார்.

    இதையடுத்து கர்ணன் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. 6 மாத சிறை தண்டனை காலம் முடிந்து வெளியே வந்துள்ள முன்னாள் நீதிபதி கர்ணன் கொல்கத்தாவில் ஊழலுக்கு எதிரான கட்சி என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கினார். இது குறித்து அவர் கூறியதாவது:-


    அடுத்த ஆண்டு நடக்கும் பாராளுமன்ற தேர்தலில் எனது கட்சி சார்பில் பெண் வேட்பாளர்களை களம் இறக்க முடிவு செய்துள்ளேன். எனது கட்சியை முறைப்படி தலைமை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்வேன்.

    நாட்டிலிருந்து ஊழலை அடியோடு ஒழிக்க வேண்டும் என்பதே என் கட்சியின் நோக்கம். மோடி எம்.பி.யாக உள்ள வாரணாசி தொகுதியில் நான் போட்டியிட போவதில்லை. அங்கு எனது கட்சி சார்பில் பெண் வேட்பாளரை நிறுத்துவேன்.

    நாடு முழுவதும் தலித்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிக்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. தலித்துக்களை சிறுபான்மையினரை அனைத்து மாநில அரசும் மத்திய அரசும் பாதுகாக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #JusticeKarnan #Karnan #CSKarnan #NewParty
    ×