என் மலர்
நீங்கள் தேடியது "முதியவர் சிறையில் அடைப்பு"
- வனவிலங்குகள் வேட்டையாடப்–படுவதாக மாவட்ட வன அலுவலகத்–திற்கு தகவல் கிடைத்துள்ளது.
- பென்னாகரம் மாவட்ட உரிமையியல் குற்ற வியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி தருமபுரி கிளை சிறையில் அடைத்தனர்.
பென்னாகரம்,
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே வனப் பகுதியில் இருந்து உடும்பை வேட்டையாடி அதன் இறைச்சியை எடுத்து வந்தவரை பென்னாகரம் வனத்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வன சரகத்–திற்கு உட்பட்ட காப்புக்காடு களில் வனவிலங்குகள் வேட்டையாடப்–படுவதாக மாவட்ட வன அலுவலகத்–திற்கு தகவல் கிடைத்துள்ளது.
இந்த நிலையில் மாவட்ட வன அலுவலர் கேவி அப்பால நாயுடு உத்தரவின் பேரில் பென்னாகரம் வன சரகத்திற்கு உட்பட்ட பேவ னூர் காப்புக்காடு பகுதியில் பென்னாகரம் வனச்சரக அலுவலர் செந்தில்குமார், வானவர்கள் முனுசாமி, சக்திவேல், புகழேந்திரன், வனக்காப்பாளர்கள் ரகு ராம், ஆனந்தராஜ் ஆகி யோர்கள் கொண்ட வனக் குழுவினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது தேவனூர் காப்புக்காடு வீரமணி குட்டை சரகத்திற்குட்பட்ட வனப்பகுதியில் இருந்து 2 கிலோ எடை கொண்ட உடும்பை வேட்டையாடி அதன் இறைச்சியை எடுத்து வந்த பென்னாகரம் அருகே கொட்டதண்டுகாடு பகு தியைச் சேர்ந்த அண்ணா–மலை (வயது61) என்பவரை வனத்–துறையினர் கைது செய்தனர்.
பின்னர் அவரை பென்னாகரம் மாவட்ட உரிமையியல் குற்ற வியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி தருமபுரி கிளை சிறையில் அடைத்தனர்.
மேலும் பென்னாகரம் வன சரகத்திற்கு உட்பட்ட காப்புக் காடுகளில் அத்து மீறி நுழைப்பவர்கள், வன விலங்குகளை வேட்டையா டுதல், வனவிலங்குகளின் இறைச்சியை விற்பனை செய்வது போன்ற வன குற்றங்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பென்னாகரம் வனத்து றையினர் எச்சரிக்ைக விடுத்துள்ளனர்.






