search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முகமது ஆமிர்"

    • 2010-ம் ஆண்டு லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் மேட்ச் பிக்சிங்.
    • அப்போது ரமீஸ் ராஜா வர்ணனையாளராக இருந்து அவர்களை அடையாளப்படுத்தினார்.

    பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளராக இருந்தவர் முகமது ஆமிர். இவர் 2010-ல் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டார். அதன்பின் தண்டனை முடிந்த பிறகு மீண்டும் அணியில் இணைந்தார்.

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். ஜூன் மாதம் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்க இருக்கும் நிலையில், மீண்டும் பாகிஸ்தான் அணிக்கு திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளார்.

    இந்த நிலையில் 2010 போட்டியின்போது வர்ணனையாளராக செயல்பட்ட பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனும், பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டின் முன்னாள் தலைவருமான ரமீஸ் ராஜா, முகமது ஆமிருக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக ரமீஸ் ராஜா கூறியதாவது:-

    முகமது ஆமிர் விவகாரத்தில் என்னுடைய பார்வை மிகவும் நேரடியானது. கிரிக்கெட்டை சரி செய்வதாக நான் உறுதிமொழி எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் சமூகமும், ரசிகர்களும் புரிந்து கொள்வது முக்கியம் என நான் நம்புகிறேன்.

    முகமது அமிர் மேட்ச் பிக்சில் ஈடுபட்டபோது லார்ட்ஸ் மைதானத்தில் நான் வர்ணணை செய்து கொண்டிருந்னே். நான் ஈடுபட்டவர்களை அடையாளம் காட்டியதால் வெறுப்பு என்னை நோக்கி வீசப்படும் என உணர்ந்தேன். மீடியாக்களால் நான் பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டேன். அதை என்னால் மறக்க முடியாது.

    உலகின் எங்கெல்லாம் இது போன்று மேட்ச் பிக்கிங் ஈடுபட்ட வீரர்கள் இருக்கிறார்களோ, அவர்கள் வெளியேற்றப்பட வேண்டும். அவர்கள் மீது எனக்கு அனுதாபம் இருக்கலாம். ஆனால், என்னுடைய அகராதியில் மன்னிப்பு என்பது கிடையாது. கடவுள் மறுத்தால் கூட என்னுடைய மகன் இதுபோன்ற செயல் செய்திருந்தால் நான் அவனை நிராகரிப்பேன்.

    இவ்வாறு ரமீஸ் ராஜா தெரிவித்துள்ளார்.

    ×