search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாடுகள் சாவு"

    • 2-ந் தேதி இரவு மாடுகளை கொட்டகையில் கட்டி போட்டு விட்டு தூங்க சென்றார்.
    • 2 பசுமாடுகளும் விஷம் கொடுத்து சாகடிக்கப்பட்டிருந்ததும் தெரிய வந்தது.

    மத்தூர்,

    மத்தூர் அருகே உள்ள சிவம்பட்டி பக்கமுள்ளது பச்சியப்பன் வட்டம். இந்த ஊரை சேர்ந்தவர் கண்ணுபெருமாள் (87). விவசாயி. இவர் வீட்டில் மாடுகளை வளர்த்து வந்தார். கடந்த 2-ந் தேதி இரவு மாடுகளை கொட்டகையில் கட்டி போட்டு விட்டு தூங்க சென்றார்.

    நேற்று முன்தினம் காலை எழுந்து பார்த்த போது 2 பசுமாடுகளும் இறந்து கிடந்தன. மேலும் அந்த 2 பசுமாடுகளும் விஷம் கொடுத்து சாகடிக்கப்பட்டிருந்ததும் தெரிய வந்தது. இது குறித்து கண்ணு பெருமாள் மத்தூர் போலீசில் புகார் செய்தார். மாடுகளுக்கு விஷம் கொடுத்து சாகவைத்தது யார், என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • இவரது 3 மாடுகள் வீட்டின் அருகே உள்ள தண்ணீர் தொட்டியில் தண்ணீர் குடித்தது.
    • சிறிது நேரத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து 3 மாடுகள் இறந்து விட்டது

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த கொட்டுகாரன் பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயராமன் (வயது63). விவசாயியான இவர் மாடுகள் வளர்ந்து வந்தார்.

    இவரது 3 மாடுகள் வீட்டின் அருகே உள்ள தண்ணீர் தொட்டியில் தண்ணீர் குடித்தது. பின்னர் சிறிது நேரத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து 3 மாடுகள் இறந்து விட்டது.

    இது தொடர்பாக ஜெய ராமன் சிங்காரப்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தண்ணீர் தொட்டில் விஷம் கலந்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    மேலும் ஊத்தங்கரை கால்நடை மருத்துவர்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக் கப்பட்டு மூன்று மாடுகளையும் சம்பவ இடத்திலேயே பிரேத பரிசோதனை செய்து பின்பு அவரது விவசாய நிலத்தில் அடக்கம் செய்தனர். இச்ச சம்பவத்தால் விவசாயி ஜெயராமனுக்கு சுமார் ஒரு லட்சம் நட்டம் ஏற்பட்டு உள்ளதாகவும் தண்ணீரில் விஷம் கலந்த மர்மநபர்களை கைது செய்ய வேண்டும் என விவசாயி ஜெயராமன் கோரிக்கை வைத்துள்ளார்.

    ×