search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மழைகால பராமரிப்பு"

    • நிசான் மழைகால பராமரிப்பு திட்டத்தில் 30-பாயின்ட் செக்கப் வழங்கப்படுகிறது.
    • வாடிக்கையாளர்கள் அதிகாரப்பூர்வ சர்வீஸ் மையங்களில் நிசான், டேட்சன் கார்களை இலவசமாக சரிபார்த்துக் கொள்ள முடியும்.

    நிசான் மோட்டார் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு மழைகால செக்-அப் திட்டத்தை அறிவித்து இருக்கிறது. இந்த திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்கள் தங்களது காரை இலவசமாக சர்வீஸ் செய்து கொள்ளலாம். இலவச சர்வீஸ் திட்டம் ஜூலை 15-ம் தேதி துவங்கி செப்டம்பர் 15-ம் தேதி வரை வழங்கப்படுகிறது.

    நிசான் கார் வைத்திருப்போர் அதிகாரப்பூர்வ சர்வீஸ் மையங்களுக்கு சென்று நிசான் மற்றும் டேட்சன் வாகனங்களை இலவசமாக சரிபார்த்துக் கொள்ள முடியும். வாடிக்கையாளர்கள் தங்களது கார்களை செக்கப் செய்து கொள்ள நிசான் கனெக்ட்ஆப் அல்லது நிசான் இந்தியா அதிகாரப்பூர்வ வலைதளத்திற்கு சென்று முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.

     

    மழைகால பராமரிப்பு பலன்கள்:

    நிசான் நிறுவனம் அறிவித்து இருக்கும் மழைகால பராமரிப்பு திட்டத்தில் கிட்டத்தட்ட 30-பாயின்ட் செக்கப் வழங்கப்படுகிறது. இதில், பேட்டரி செக்கப், வெளிப்புறம் மற்றும் உள்புற ஆய்வு, அன்டர்பாடி செக்கப், ரோடு டெஸ்ட், இலவச வாட்டர் வாஷ் உள்ளிட்டவை அடங்கும்.

    இலவச கார் பராமரிப்பு சேவை மட்டுமின்றி வைப்பர் பிளேடுகளுக்கு 10 சதவீதமும், லேபர் மற்றும் பிரேக் பேட் மாற்றுவதற்கு அதிகபட்சம் 20 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    "அர்த்தமுள்ள கார் பயன்படுத்தும் அனுபவத்தை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். இதுவே எங்களை தனித்துவம் மிக்க பிரான்டாக மாற்றுகிறது. மழைகால பராமரிப்பு திட்டம் இந்த குறிக்கோளின் அங்கங்களில் ஒன்று. வாடிக்கையாளர்களின் தேவை மற்றும் எதிர்பார்ப்புகளை கடக்கும் வகையில் தலைசிறந்த அனுபவத்தை வழங்கும் பல்வேறு வழிகளில் இதுவும் ஒன்று," என நிசான் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர், ராகேஷ் ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார்.

    ×