search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மருத்துவ காப்பீடு திட்ட அட்டை"

    • மருத்துவ காப்பீட்டு திட்டம் மற்றும் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்ட ஆண்டுவிழா கலெக்டர் தலைமையில் நடைபெற்றது.
    • 15 பயனாளிகளுக்கு முதல்-அமைச்சர் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டைகள் வழங்கப்பட்டது.

    தேனி:

    தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் மற்றும் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்ட ஆண்டுவிழா கலெக்டர் ஷஜீவனா தலைமையில் நடைபெற்றது.

    பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டம் மற்றும் முதல்-அமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டம் ஒன்றிணைந்து 2018-ஆம் ஆண்டு முதல்- அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டமாக செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் இதுவரை 1.40 கோடி குடும்பங்கள் இணைந்துள்ளனர். ஒரு குடும்பத்திற்கு ஆண்டிற்கு ரூ.5 லட்சம் வரை கட்டணமில்லாமல் தரமான சிகிச்சைகள் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் வழங்கப்படுகிறது .

    இத்திட்டத்தின் மூலம் பயனடைந்த 5 பயனாளிகளுக்கு பரிசு பொருட்கள் வழங்கியும், 15 பயனாளிகளுக்கு முதல்-அமைச்சர் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டைகள் வழங்கியும், இத்திட்டத்தினை செயல்படுத்திய 2 அரசு ஆஸ்பத்திரி மற்றும் 2 தனியார் ஆஸ்பத்திரிகளுக்கும் பணியாற்றிய திட்ட ஒருங்கிணைப் பாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் ஷஜீவனா வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் சுகாதார பணிகள் இணை இயக்குநர் ரமேஷ்பாபு, மருத்துவ கல்லூரி மருத்துவமனை காப்பீடு திட்ட பொறுப்பு அலுவலர் ராமசுப்பிரமணியன், பெரியகுளம் தலைமை ஆஸ்பத்திரி டாக்டர் குமார், மாவட்ட திட்ட அலுவலர் ராஜா, ஒருங்கிணைப்பாளர்கள் ஜெயக்குமார், செல்லமணி மற்றும் அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×