என் மலர்
நீங்கள் தேடியது "மனைவி உயிரிழப்பு"
- கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட சாலை விபத்தில் கவுசல்யா பரிதாபமாக உயிரிழந்தார்.
- மிகுந்த வேதனையில் இருந்த நந்தகுமார் யாருடனும் பேசாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார்.
வேடசந்தூர்:
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகில் உள்ள குட்டம் ஊராட்சி சுக்காம்பட்டியை சேர்ந்தவர் நந்தகுமார்(25). இவரும் தேனி மாவட்டத்தை சேர்ந்த கவுசல்யா(22) என்பவரும் காதலித்து கடந்த ஓராண்டுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட சாலை விபத்தில் கவுசல்யா பரிதாபமாக உயிரிழந்தார்.
அதன்பிறகு மிகுந்த வேதனையில் இருந்த நந்தகுமார் யாருடனும் பேசாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். நேற்று தனது வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து வேடசந்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவரது உடலை கைப்பற்றி வேடசந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
திருமணமான ஓராண்டிலேயே கணவனும், மனைவியும் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.






